அனுஷ்காவிடம் வியந்த கமல் . . .

அனுஷ்காவின் நடிப்‌பை பார்த்து வியந்து போன கமல், தன்னுடைய அடுத்த படமான “தலைவன் இருக்கிறான்” படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

“அருந்ததீ” படத்தின் மூலம் நடிப்பின் உச்சிக்கு சென்‌ற அனுஷ்கா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதா நாயகர்களுடன் நடித்து, இருமாநில ரசிகர்களையும் தமது அழகால் கட்டிப் போட்டுள்ளார். அனுஷ்காவின் நடிப்பை பார்த்து வியந்து போன நமது உலக நாயகன், தமது அடுத்த படமான “தலைவன் இருக்கிறான்” படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் கமல் தான். தன்னுடைய சொந்த தயாரிப்பான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படம், மிகுந்த பொருட்ச் செலவில் உருவாக்கப்பட இருக்கிறது.

(thanks dinamalar)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *