தயாரிப்பாளர்கள் போர்க்கொடி: இசையமைப்பாளருக்கு பங்கு. . .

திரைப்படங்கள் மூலம் வருகிற வருமானத்தில் கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கு 50 சதவீத உரிமை கோருவதை கண்டித்து தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், துணைத் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், அகில இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் எல்.சுரேஷ், மும்பை `கில்ட் தலைவர் மகேஷ்பட், செயலாளர் ஹரிசந்த், மும்பை பட அதிபர்கள் சங்க தலைவர் டி.பி.அகர்வால், செயலாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் ஆகியோர் கூட்டாக சென்னையில் அளித்த பேட்டி:-

இந்திய திரையுலகம் இதுவரை சுதந்திரமாக செயல்பட்டு வந்தது. அதை சீர்குலைக்கும் நோக்கத்தில், இந்தி சினிமா பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர் (இந்தி நடிகை சபானா ஆஸ்மியின் கணவர்) கதாசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்களை தூண்டி விட்டு வருகிறார். திரையரங்குகளைத் தாண்டி திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதம் கதாசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

இதற்காக, அரசியலில் ஜாவேத் அக்தர் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இருக்கிறார். இதன் விளைவாக, வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவர இருக்கிறது. அதன்படி, கதாசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு வரும்

film shooting

வருமானத்தில் 50 சதவீதத்தை கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்தியா முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

எனவே மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து, டில்லியில், ஜனவரி மாதம் 6ம்தேதி இந்தியா முழுவதும் உள்ள சினிமா பட தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். அன்று, இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.  சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் அன்று நடைபெறாது. இந்த போராட்டத்துக்கு தமிழ் திரைப்பட உலகின் அனைத்து பிரிவுகளும் ஆதரவு தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)

(புகைப்படங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *