கேள்வி:- ஈரோட்டில் ரசிகர்களிடம் கோபப்பட்டீர்களே ஏன்?
பதில்:- என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்க மாட்டேன். அடித்து இருப்பேன்.
கேள்வி:- அரசியலுக்கு வருவீர்களா?
பதில்:- எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும்
கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்.
கேள்வி:- அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?
பதில்:- நல்ல அரசியல் வாதியாக இருக்க வேண்டும்.
கேள்வி:- “பவானி” படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்தீர்களாமே?
பதில்:- உண்மைதான். விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் இது. போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். சண்டை காட்சியில் நிஜமாகவே 16 ஸ்டண்ட் நடிகர்களை தெரியாமல் அடித்து இருக்கிறேன்.
அடிப்பது போல பாவனைதான் செய்யனும். ஆனால் முதல் ஆக்ஷன் படம் என்பதால் உண்மையாகவே அடித்துவிட்டேன். படம் பார்த்தேன் ரொம்ப பிடிச்சது. நான் நடித்தது என் மனசுக்கு பிடித்த படங்களில் பவானியும் ஒன்றாக இருக்கும்.
இதில் புதுமையான சினேகாவை பார்க்கலாம். சண்டைக்காட்சிகளை பார்த்து இதில் நானா நடித்தேன் என்று வியந்தேன். வெளியூர் போகும்போதெல்லாம் பவானி எப்போ ரிலீஸ் என்றுதான் கேட்கிறார்கள்.
இதில் புதுமையான சினேகாவை பார்க்கலாம். சண்டைக்காட்சிகளை பார்த்து இதில் நானா நடித்தேன் என்று வியந்தேன். வெளியூர் போகும்போதெல்லாம் பவானி எப்போ ரிலீஸ் என்றுதான் கேட்கிறார்கள்.
இம்மாதம் வரப்போகுது. கயிற்றை கட்டி அந்தரத்தில் தொங்கி சண்டை போட்டது புது அனுபவமாக இருந்தது. ஆக்ஷன் ஹீரோக்களின் கஷ்டமும் புரிந்தது. படத்தில் அரசியல்வாதிகளை எதிர்த்து சண்டை போடுகிறேன்.
கேள்வி:- விஜயசாந்திக்கு இந்த படத்தை காட்டுவீர்களா?
பதில்:- ஒரு டி.வி. பேட்டியில் இந்த படம் பற்றி கேட்டபோது சினேகா பொருத்தமான நடிகை என்று பாராட்டி உள்ளார். அவருக்கு படத்தை திரையிட்டு காட்ட ஆசைப்படுகிறேன்.
கேள்வி:- ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?
பதில்:- பவானி படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதை முடிவு செய்வேன். ஆக்ஷன் படங்களில் நடிக்க எனக்கு பயம் இல்லை. படப்பிடிப்பு முடிந்து காக்கி சட்டையை கழற்றியது வருத்தமாக இருந்தது. மீண்டும் இது மாதிரி படங்களில்
நடிக்க ஆசைப்படுகிறேன்.
கேள்வி:- நிஜவாழ்க்கையில் உங்கள் கையால் அடிபட வேண்டியவர் யாரேனும் இருக்கிறார்களா?
பதில்:- நிஜத்தில் நான் அடிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்ல முடியாது.
கேள்வி:- பவானியில் நீங்கள் பேசிய பஞ்ச் வசனம்?
பதில்:- ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ் போலீஸ் தாண்டா?
இவ்வாறு சினேகா கூறினார். பேட்டியின்போது “பவானி” பட இயக்குனர் கிச்சா உடன் இருந்தார்
படங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்