“தூங்கா நகரம்” படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஞ்சலி.
இதில் ஜெய்க்கு ஜோடியாக, வலு வான ஒரு பாத்திரத்தில் நடிக்கி றாராம். இதுகுறித்து அஞ்சலி பேசும் போது, ‘அங்காடித் தெரு’ படத்தி லிருந்து என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் ‘கனி’ பாத்திரம் மாதிரி முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைய வேண்டுமே? ஏ.ஆர்.முரு கதாஸ் ஸார் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் ‘கனி’ கேரக்டர் மாதிரி அழுத்தமான பாத்திரம் கிடைத்து ள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் படத்திற்கு தேதிகள் ஒதுக்குவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அப்போது ஏ.ஆர். முருகதாஸ் ஸார் கூப்பிட்டு, “முதலில் கதையை கேளு ங்கள், அப்புறம் சொல்லுங்கள்” என் றார்.
கதையை கேட்டதும் எனக்கு ரொம் பவும் பிடித்துவிட்டது. அதனால் உட னே நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தில் மாறுபட்ட ஒரு அஞ்சலியை நீங்கள் பார்க்கலாம். என்னிடம் நிறைய பேர், “கிளாமராக நடிப்பீர்களா?” என் றும் கேட்கிறார்கள்.
நான் இன்னும் அந்த எல்லைக்குள் போக வில்லை. இப்படி கூறுவதால் நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. என்னிடம், “நான்கு டூயட் வேண்டுமா?, நான்கு காட்சிகள் வேண்டுமா?” என்று கேட்டால், முதலில் ‘நான்கு காட்சிகள் கொடுங்கள்’ என்றுதான் சொல்வேன். என்ன, நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? என்று எதிர் கேள்வி கேட்கிறார் அஞ்சலி.
இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்