40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பி.பி.ஸ்ரீனிவாஸ்: பேட்டி

காலங்களில் அவள் வசந்தம்…, நிலவே என்னிடம் நெரு ங்காதே…, ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்…, மயக் கமா கலக்கமா…, மனிதனெ ன்பவன் தெய் வமாகலாம்…, ரோஜா மல‌ரே ராஜகுமாரி… போன்ற எக்கச்சக்க மெலோடி குரலுக்கு சொந்தக்காரர் பி.பி.எஸ். என்று அழை க்கப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ‌ஜெமினி என ப்ளாக் அண்ட் ஒய்ட் ஹீரோக்கள் எல்லோருக்குமே குரல் கொடுத்த பி.பி.எஸ். 40 ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :-

22 வயதில் சினிமாவுக்கு வந்தேன். பல ஆயிரம் பாடல்களை பாடி, தமிழர்களின் ஒவ்வொரு நிமிஷத் திலும் கலந்திரு க்கிறேன்.  பெரிய பெரிய ஆள்களிடம் நான் பாரா ட்டுக்களை வாங்கிவிட்டேன். அது வே கடைசிக் காலம் வரைக்கும் என்னை இட்டுச் செல்லும். வாழ் க்கையின் லட்சியமே சினிமாவில் பாடுவதுதான். ஆனால் அது என் குடும்பத்தாருக்குப் பிடிக்கவில் லை. நான் வக்கீல் ஆக ஆசைப் பட்டார்கள். அது நடக்கவில்லை. சினிமாவுக்கு வந்ததால் பெருவாரி யான மக்களின் அன்பில் நனைந்திருக்கிறேன். அந்த அன்புதான் இப்போதும் என் வாழ்வை அழகாக்கி வைத்திருக்கிறது. எல்லோ ரையும் அன்பு செலுத்தி, அரவணைக்க ஆசையாக இருக் கிறேன். எல்லோரின் வாழ்வுக்காகவும் பிரார்த் திக்கிறேன். எல்லோரும் நலம் வாழ நான் பாடிய பாடல்கள் துணையாக வரும் என்ற பெரும் நம்பிக்கையுடன் உலா வுகிறேன்.

இதுவரை எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதில் வருத்தம் எதுவும் இல்லை. எல்லாம் இறை செயல். எது நடக்குமோ, அது நடந்தே தீரும். நீ சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் உன் பெயர் எழுதியிருக்கிறது. இதை யாராவது மாற்ற முடியுமா? ஆனால் ஒரு படைப்பாளி காலங்கள் கடந்து நிற்க அங்கீகாரம் அவசியம். அது எனக்குக் கிடைக்கவில்லை என்றா லும் நான் மறக்கடிக்கப்பட மாட்டேன். உனக்கும் கீழே உள்ள வர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு… என்ற வரிகளை நினைத்துக் கொள்வேன்.

இப்போதெல்லாம் ரீ-மிக்ஸ் என்ற பெயரில் குரல்களை சிதைக்கிறார்கள். எந்தக் கலைஞனும் தன் குரல் சிதைக்கப்படுவதை விரும்பமாட்டான். ரீமிக்ஸ் செய்து எதையும் கெடுத்து விடாதீர்கள். எங்கள் பாடல்களில் தமிழர் வாழ்வின் பழங்காலம் இருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்துங்கள். இன்னும் எத்தனையோ தமிழர் தலைமுறைகளுக்கு என் குரல் அமைதியும் உற்சாகமும் தரட்டும்.

இவ்வாறு பி.பி.எஸ். பேட்டியில் கூறியுள்ளார். ரீ-மிக்ஸ் பாடல்கள் குறித் தும், அவர் அங்கீகரிக்க ப்படாதது குறித்தும் ஸ்ரீனி வாஸ் ரொம்பவே பக்கவமாக கருத்துக்களை தெரிவி த்திருக்கிறார். அன்று முதல் இன்று வரை என்றில்லாமல் என்றென்றும் கேட்பதற்கு இனிமையான பாடல்களை தன் குரலால் அலங்கரித்த பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடல்களில் உங்களை ரொம்பவே கவர்ந்த பாடல்கள் என்னென்ன? என்பதை இங்கே நீங்களும் பட்டியலிடுங்களேன். உங்களின் கருத்துக்கள் பி.பி.எஸ்.க்கு ஒரு அங்கீகாரத்தை தரட்டும்!

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்
ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *