“எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” – சிம்பு

“எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
சிம்பு நடிக்கும் “வானம்” படத்தின் படப் பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இதில் அவரே ஒரு பாடலை எழுதி பாடவும் செய் துள்ளார். எவனடி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று துவங் கும் இப்பாடல் சி.டி. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்பே வெளி வந்துள்ளது.

இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அனைத்திந்திய பெண் கள் பாதுகாப்பு சங்கத்தலைவி சாந்தி இது குறித்து வெளியி  ட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடிகர் சிம்பு எழுதிய பாடல் வரிகள், பெண்கள் மனதை காயப்படுத்துவது போல் உள் ளது.

எவன்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என் பது தரமற்ற வரிகள், பாடல் எழுத வரைமுறைகள் உள்ளது. இழி வான வரிகளை பாடலுக்கு பயன்படுத்துவது இளைய சமுதாயத் தினரின் மனப்போக்கில் மாசு ஏற்படுத்தும். இதையே இளைஞர் கள் பெண்களை “ராக்கிங்” செய்ய பயன்படுத்தக்கூடும். சினிமா என்பது வலுவான சாதனம்.

அதில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை எளிதில் சென்று அடைகின்றனர். எனவே சிம்பு போன்ற வர்கள் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். அந்த பாடலில் உன் மானம் காக்கிற மேல் ஆட நான்தான் என்றும் எழுதி இருக்கிறார்.

இது ஆபாசமானது. அவர் படங்களில் பெண்ணினத்துக்கு எதிரான வன்மங்கள் தூக்கலாக உள்ளன. பெண்களுக்கு மரியாதை செய் வது போன்ற காட்சிகள் வைப்பதில்லை.ஒரு படத்துக்காக சென் னையில் ஒட்டப்பட்டிருந்த முத்தக் காட்சி போஸ்டர்கள் இதற்கு சான்று ஆகும். சிம்பு தனது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண் டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
‌( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *