குஷ்பு கருத்து: விஜய் அரசியலுக்கு வருவது …

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்ப டுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங் களுக்கு பிறகு தனிக் கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப் பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இய க்கமாக மாற்றி உள் ளார்.
விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்பு விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபட லாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டு வார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோ ருடைய ஓட்டும் நமக்குத் தான் விழும் என்று எதிர்பார்த்து அரசி யலுக்கு வரக்கூடாது.
சினிமாவை விட அரசியல் கஷ்டமான விஷயம். நடிகைகளில் ஜோதிகாவையும் நடிகர்களில் கார்த்திக்கையும் எனக்கு பிடிக் கும். அனுஷ்காவும் என்னை கவர்ந்துள்ளார். சட்டமன்ற தேர்த லில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி பேச மாட் டேன். குறிப்பாக சரத் குமார், விஜயகாந்த், கார்த்திக் போன்றோ ரை விமர்சிக்க மாட்டேன்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *