ஜெயலலிதாவை பழிவாங்கும் தளபதி …!

ஜெயலலிதாவை பழிவாங்கும் இளையதளபதி!

வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசா ரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளி யாகியுள் ளது.

ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளி யிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய் வது தொடர்பாக எழுந்த பிரச்னை களை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திர சேகர், அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடி னார்.
அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும் கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர் களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் ஆளும் கட்சி மீது குற்றம்சாட்டினார்.
இதனால் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதர வாக பிரசாரம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளி யாயின. ஆனால் இதுபற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ .சி. யோ எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், அதிமுகவில் விஜய்க்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாகவும், எஸ்.ஏ.சி., புதுக் கோட்டை தொகுதியில் போட்டியிடப் போவ தாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி எஸ்.ஏ.சி.,யிடம் கேட்டால், மழுப்பலான பதிலையே தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி யுள்ளது.
தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கிள ம்பும் திட்டத்தில் இருக்கும் விஜய், தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கையை மட் டும் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.
விஜயின் தந்தையின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சட்ட ப்படி குற்றம்` படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயலலி தாவை கலந்துகொள்ள வைத்து விஜயின் அரசியல் பயணத் துக்கு பிள்ளை யார்சுழி போடலாம் என்று எண்ணி இருந்த சந்திர சேகரின் நினைப்புக்கு ஆப்பு வைத்த ஜெயலலிதாவை பழி வாங்கு வதற்காகவே இப்படி விஜய் அறிக்கையோடு நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளார் என்றே எண்ண தோன்றுகிறது. அந்த அறிக்கையாவது சூட்டை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *