“மன்மத ராசா…” சாயா சிங் சின்னத்திரையில் …

“திருடா திருடி” படத்தின் மூலம் தமிழ் சினி மாவில் அறிமுகமா னவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூ டன் இவர் ஆடிய “மன் மத ராசா…” பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த படத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திரு ந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந் தாலும் அம்மணி அதனை மறுக்க வில் லை. வந்த வரைக்கும் லாபம் என்பது போல ஒத்தபாட்டுக்கு ஆடத் தொடங்கினார்.

மன்மத ராசாவை தொடர்ந்து, விக்ரமு டன் “அருள்” படத்தில் ஒரு பாடல், விஜய் யுடன் “திருப்பாச்சி” பட த்தில் “கும்பிட போன தெய்வம்…” என்று நடிக்க ஆரம்பித்தார். இந்நிலை யில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பார்த் திபனுடன் “வல்லமை தாரா யோ” படத்தில் நடித்தார். அதன்பின்னர் சிறிது இடை வெளிக்கு பின்னர் ஷங்கரின் “அனந்தபுரத்து வீடு” பட த்தில் நடித்தார். தொட ர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் வராததால் சின்னத் திரையில் களம் இறங்கி விட்டார். தமிழில் முன்னணி டி.வி., சான ல் ஒன்றில் சஸ்பென் ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த தொடர் ஒன் றில் நடித்து வரு கிறார்.

இதுகுறித்து சாயா சிங் கூறுகையில், சின்னத் திரையில் நடிக்க இருந் தது உண்மை தான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று எதிர்பார்க்க வில் லை. இந்ததொடரின் கதை மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக்கொ ண்டேன் என்று கூறியுள்ளார்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *