அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் விவேக்

இதைவிட ஒரு பெரிய கவுரவம் நடிகர் விவேக்குக்கு வந்துவிடப் போவதில்லை. இதை தனது நண்பர்கள் அத்தனை பேரிடமும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவ ர்.

அப்படியென்ன பொல்லாத விஷயம் நடந்துவிட்டது? பெங்களூருவில் இயங்கி வரும் மிகப்பெரிய அறிவியல் கழகத்தின் சிறப்பு விருந் தினராக அழைக்கப் பட்டிருக் கிறார் நடிகர் விவேக்! நடிகர் நடிகைகளை கல்லு£ரி விழாக் களுக்கு அழைப்பதெல்லாம் சமுதாயத்தில் அன் றாடம் நடை பெறுகிற கூத்துதானே என்று அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது இந்த விஷயத்தை. ஏன் தெரியுமா?

`இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்` என்ற கல்லு£ரியின் நிர்வாகிகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நேரில் சந்தித் தார்கள். `என்னால் என்ன செய்ய முடியும்` என்ற தலைப்பில் நீங்கள் வந்து பேச வேண்டும் என்று அழைத்தார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில் என்னால் வர இயலாது. ஆனால் எனக்கு பதிலாக நீங்கள் வேறொருவரை அழைத்துச் செல்லுங்கள். நான் சொ ல்ல நினைத்த கருத்துக்களை அவர் சொல்வார் என்றாராம் கலாம்.

வந்தவர்கள் கலாமே சொல்கிறாரே சரியாகதான் இருக்கும் என்று சம்மதிக்க, அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் விவேக். இந்த நிகழ் ச்சிக்காக இன்று பெங்களுர் கிளம்புகிறார் அவர். ஒருபுறம் வடி வேலு போகிற மீட்டிங் எப்படியிருக்கிறது. மறுபுறம் விவேக் போகிற மீட்டிங் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *