விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில்

சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங் குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தி யா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை கட்சி பாகுபாடு இல்லா மல் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்து சிரிக்கிறார்கள். வடி வேலுவின் பிரசாரம் மக்களை எளிதில் சென்று வருவதாலோ என்னவோ ஆளும்கட்சி தொ லைக்காட்சிகளில் வடிவேலு பேச்சுக்கு முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விந்தியா பிரசாரத்தில் குதித்துள்ளார். நேற்று அவர் ‌பிர சாரத்தின்போது பேசுகையில், வடி வேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரி யுது. திமுககிட்ட எவ்வளவு வாங் குனாரோ தெரியல. வாங் குனது க்கு வஞ் சமில்லாம பேசிக்கிட்டு திரிய றாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச் சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல் லைங்க. சினிமாவில கூட இந்த மா திரி காமெடியை நான் பார்த்த தில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம் மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக் காகத்தான் இப்படி பேசுறாரு, என்றார்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

i

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *