சச்சினுடன் ஒரேயொரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என் பதுதான் புன்னகை இளவரசி சினேகா வின் நீண்ட நாள் ஆசையாம்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் கோப் பையை வென்றிருக்கும் இந்திய அணி, உலக கோப்பையை சச்சினுக்கு சமர்ப் பித்து கவுரவித்துள்ளது.
இந்நிலையில் சச்சின் பற்றி சினேகா அளித்துள்ள பேட்டியில், சச்சி னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை ப்படுவதாக கூறியுள்ளார். நான் சச்சி னின் பரம ரசிகை.
வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் லிக்கரை தொட மாட்டேன் என்று தன்னோட அப்பாவுக்கு சச்சின் சத்தியம் பண்ணிக் கொடுத்ததா படிச்சிருக்கேன்.
ஒரு மதுபான நிறுவனம் 20 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் விளம் பரத்தில் நடிக்கச் சொன்னப்போ, சச்சின் உறுதியா மறுத்து ட்டாராம்.
அப்படிப்பட்ட சச்சின் கூட போட்டோ எடுக்கத் தான் எனக்கு நீண்ட நாள் ஆசை, என்று கூறியிருக்கிறார் சினேகா. சினேகா வின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா சச்சின்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.