மதுபானத்தை விட பெண்கள் மலிவு: சர்ச்சையில் …

டைரக்டர் ரோகன் சிப்பி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், தீபிகா படு கோனே, பிபாஷா பாசு ஆகியோர் நடிப் பில் உருவாகி இருக்கும் படம் “தம் மா ரோ தம்”. இப்படம் விரை வில் வெளிவர இருக்கிறது. இதனி டையே இப்படத்தின் டிரைலர் வெளி யாகியுள்ளது. அதில் ஒரு  கோவா வில் மதுவை விட பெண் கள் மலிவு என்று இடம் பெற்றுள்ளது. இதனை நடிகை பிபாஷா பேசி இரு க்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்திற்கு ‌நாடு முழுவதிலும் இருந்து பயங்கர எதிர்ப்பு கிள ம்பி இருக்கிறது. கோவாவில் இருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கொதித்துப் போய் உள்ளனர்.

கோவா நகரின் இமேஜைக் கெடு ப்பதற்காகவே படத்தில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. படத்திலிருந்து இந்த வசனத் தை நீக்காவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கூறி யிருக்கின்றனர் கோவாவில் இருக்கும் சமூக ஆர்வலர்கள்.

சிவசேனா கட்சியின் கோவா தலைவர் பிலிப் டிசூஸா கூறு கையில், இதே போல ஒரு காட் சியை வேறு எந்த மாநிலத் திலா வது போய் எடுத் திருந்தால் சும்மா இருந்திருப் பார்களா… கோவாவை இழிவு படுத்து வதை பார்த்துக் கொண்டிருக்க முடி யாது. இனி கோவாவில் பட மெடுக்க வருப வர்கள், முதலில் படத்தின் கதை, திரை க்கதை உள்ளி ட்ட வைகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண் டும் என்பதை கட்டாய மா க்க வே ண்டும் என்றார்.

இதனிடையே தம் மாரோ தம் படத்தின் வசனம் அதிருப்திக் குள்ளாகி இருப்பதாக கோவா முதல்வர் திகம்பர் காமத் தெரி வித்துள்ளார். மே லும் படத்தை தடை செய்வது குறித்து மும்பை கோர்ட்டில் முறையிட இருப்பதாகவும் அவர் கூறினார்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *