பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8வயது மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் விழுந்து பலியானார்.
பிரபல பின்னணி பாடகி சின்ன குயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்த வரான இவர் தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொ ழிகளில் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக் கும் விஜய சங்கர் என்பவரு க்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8வயதாகிறது.
இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடை பெறு
கி
றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ரா வுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர். ரஹ் மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனை வரும் ஏ.ஆர். ரஹ் மானின் பாடல்களை பாட இருக்கி ன்றனர். துபாயின் எமிரேட்ஸ் ஹில் ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந் தையுடன் தங்கியிருந்தார்.
சித்ராவின் மகள் நந்தனா வீட்டி னுள் விளையாடிக் கொண்டிருந் தார். அப்போது எதிர்பாராவித மாக அங்கிருந்த நீச்சல் குளத் தில் தவறி விழுந்தார். இதனை யடுத்து உடனடியாக குழந்தை நந்த னாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக் டர்கள் தெரிவித் தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண் முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா.
சின்னக்குயில் சித்ரா அவர்களின் மகள் நந்தனா விபத்தில் பலி – வீடியோ
இணையத்தில் கண்டெடுத்த செய்தி
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது