விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போன அனுஷ்கா

தெய்வத்திருமகன் படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிர மித்து போய் விட்டேன். இந்திய அளவில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் மீண் டும் நிரூபித்து இருக்கிறார் என்று வெகுவாக பாராட்டுகிறார் அனுஷ்கா.

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் விஜய், அடு த்து விக்ரமை வைத்து தெய்வத் திருமகன் என்ற படத்தை இயக்கி யுள்ளார். இப்பட த்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலா பால், சந்தானம், எம்.எஸ். பாஸ்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து ள்ளார். இப்படத்தில் விக்ரம் மன வளர்ச்சி குன்றிய இளைஞராக நடிக்கி றார். படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் இருக்கிறார் அனுஷ்கா.

இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது, இந்தபட த்தில் விக்ரமின் நடி‌ப்பை பார்த்து பிரமித்து போய் விட்டேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் படும் சிரமங்கள் நேரில் பார்த்து ஆச்சரியப் பட்டேன். தான் மட்டுமல்ல தன்னுடன் நடிப்பவர் களும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி னார். என்னுடைய சினி மா வாழ்வில் இப்படி நடிக்க ணும் என்று யாரும் இதுவரை சொல்லிக் கொடுத் ததில்லை. படத் தில் அவருடைய நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்தபடம் விக்ரமிற்கு நிச்ச யம் பல விருதுகளை பெற்று தரும். இந்திய அளவில் அவர் தலைசிறந்த நடிகர். விக்ரம் மட்டு மல்ல இந்த படத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் ஜி.வி. பிர காஷ் குமாரின் இசையும் தான். இவ்வாறு அவர் கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *