சிம்புவை சீண்டாதீர்கள்! டி.ராஜேந்தர் ஆவேசம்…! – வீடியோ

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த சிம்பு ரசிகர்கள் இன்று காலையில் காவல் துறை யினரால் கைது செய்யப் பட்டனர்.

கைது செய்யப்பட்ட சிம்பு ரசிகர்களை விஜய டி.ராஜேந்தர் சந்தித்தார். பிறகு காவல் துறை யினருடன் விவாதித்து தன் சொந்த பொறுப் பில் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அப்போது அவர் வானம் படத்தில் இடம் பெற்ற காட்சிகள் நிஜத் தில் நடப்பவை தான் சினிமா வேறு, அரசியல் வேறு இரண் டையும் கலக்காதீர்கள்.

மேலும் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தினால் சிம்பு ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். வீணாக எங்களை சீண்டாதீர்கள் என்று எச்சரித்தார்.

சிந்திப்பதற்காக‌

இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ இது

விதை2விருட்சம் இணையத்தின் வேண்டுகோள்!

டி. ராஜேந்தர் அவர்கள் ஒரு பன்முக கலைஞன் இவரது நடிப்பாகட்டும், தமிழாகட்டும் ரசிக்க கூடியவையே!

மேலும் அவர் ஒரு பல குரல் மன்னன், பல திரைப்படங்களை அவரே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். மேலும் இவர் ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர் மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளரும் ஆவார்.

இவர் 80களில் அடுக்குமொழிகளில் சிறந்த கவிதைகளை எழுதி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.

இத்தகைய சிறப்புக்களை பெற்றவரை ஏனோ தெரிய வில்லை பத்திரிகைகள், ஊடகங்கள், இணையதளங்கள் போன்றவை இவரை ஒரு கேலிப்பொருளாகவே பார்க்கின்றன• இந்நிலை மாற வேண்டும். இவரது தோற்றத்தை மட்டுமே பார்த்து சிரிக்க வே ண்டாம். இவருக்குள் இருக்கும் திறமைகளை கண்டு ரசியுங்கள் சிந்தியுங்கள்.

நன்றி
விதை2விருட்சம்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *