தான் இறந்த காட்சியை பார்த்து, கதறி அழுத நடிகை பியா

“கோ” வில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிபவராக, இயல் பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் பியா. கோவா, பொய் சொல்ல போறோம், ஏகன், பலே பாண்டியா இந்த படங்களில் எல்லாம் வித்யா சமாக நடித்து இருந் தாலும், கோ படம் பிரிவியூ பார்த்து விட்டு தான் இறந்த காட்சியை திரையில் பார்த்தவுடன் கதறி அழுதிரு க்கிறார். இவரது தலைமுடி கொஞ்சம் வித்யா சமாக இருந்தாலும், தற்போது கிராமத்து கதைகளில் பாவா டை தாவணி யோடு நடிக்க ரொம்பவே காத்திருக் கிறாராம்.

லிப் கிஸ், பிகினி இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்கி றார். படத்திற்கு காட்சி தேவை என்றால் அப்படி நடிப்பது ஒன்றும் தப்பில்லை, அதில் ஆபாசம் தான் கூடாது என்கிறார். மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசையாம், வி‌ரைவில் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். இன்னமும் தமிழ் கற்றுக் கொள்ள முடியாமல் திணறும் பியாவிற்கு தெரிந்த வார்த்தைகள் சரிப்பா, கண்டிப்பா, சாப்பிட்டியா போன்றவை தான். புரிந்து கொள்ளும் அளவிற்கு பேச வரவில்லையாம். அடுத்த வருடத்திற்குள் தமிழ் பேசிவிடுவேன் என்று உறுதியாக சொல்கிறார். இனி அவர் நல்ல நல்ல படங்களில் என்னை பார்க்லாம் என்று பெரும் நம்பிக்கையோடு சொல்கிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *