மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறை க்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவரு க்கு ஆபத் தாக முடிந்தது என்று இப் போது புதிய தகவல்கள் வெளியாகியுள் ளன. மருந்து, மாத்திரை, மருத்துவ மனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்பு படுத் தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவமனைக்கு சென்று யாரும் பார்த்த தில்லை.
மேலும் அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்று சமீபத்தில்தான் பேட்டி யளித்திருந் தார். யோகா, இயற்கை மருத்துவம் போன்றவற் றில்தான் ரஜினி அதிக கவனம் செலுத்திவந்தார். அரிசி உண வுகளை முற்றாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் ராணா படத்துக்காக அவர் உடலை மேலும் ஸ்லிம்மாக்கும் முயற்சியில் 15 கிலோ வரை எடை யைக் குறைத்துள்ளார். 20 நாட்களில் இந்த அளவு எடையைக் குறைத் துள் ளார் ரஜினி. இதற்காக மருந்து மாத்தி ரை எதுவும் எடுக்கவில் லையாம். வெறும் நீர்ம உணவு மற்றும் கடுமையான யோகா சனத்தை மேற்கொண்டுள்ளார் ரஜினி.
இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெயிக் வாட் கூறுகையில், “ராணா படத்தில் ஒரு கேரக்டருக்காக தம்பி 20 கிலோ வரை எடையைக் குறைத்துவிட்டார். இதற்காக அவர் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அது தான் அவருக்கு லேசான பாதிப் புகளை ஏற்படுத்தியது. ஆனால் அதை அசட்டை செய்துவிட்டு தொடர்ந்து அவர் படப்பிடிப்புக்குப் போனதால் காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு அதிகரித்து விட்டது. ஆனால் பயப் படும்படி ஒன்றுமில்லை…”, என்றார்.
மதுவுக்கு ‘பை’ சொன்ன ரஜினி!!
ரஜினி எந்த அளவுக்கு மது அருந்து வார் என்பது வெளிப்படை யாகத் தெரி ந்த ஒன்று. சில நேரங்களில் 10 பெக் வரை கூட போவது அவர் வழக் கமாம். ஆனால் அவரது 61வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட தினத்திலிருந்து குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டா ராம் ரஜினி. இன்று வரை ஒரு சொட்டு மதுவைக் கூட அவர் தொடவில்லை யாம்.
கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற் றும் மதுப்பழக்கத்தை திடீ ரென கை விட்டது காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட் டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனாலும், இனி மதுவைத் தொடுவதில்லை, சிகரெட் டையும் முழுமையாக விட் டு விடுவதாக ரஜினி உறுதி யெடுத்துள்ளதை அவ ரது குடும்பத்தினரே ஆச்சரிய த்துடன் பார்க்கிறார்களாம்.
இந்த ஆச்சர்யம், குடி மற் றும் மதுவை விடமுடியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பது சூப்பர் ஸ்டாரின் விருப் பமாம். இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்!!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்