விரைவில் விஜய் . . .

நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கு வேன். ஆனால் அதற்கான கால மும் நேரமும் இப்போது இல் லை என்று கூறியிருக்கிறார் நடி கர் விஜய்.

சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதி முக.,வுக்கு ஆதரவாக விஜய் யின் மக்கள் இயக்கமும் செயல்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடி வுகள் வெளியான பிறகு ஜெயலலிதாவை விஜய்யும், அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.‌ஏ.சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய், இந்த தேர்தலில் அதிமுக., வெற்றி பெறு ம் என்பது எனக்கு முன் பே ‌தெரி யும், ஆனால் இந்தளவுக்கு வெற்றி பெறும் என்று நினை த்துக்கூட பார்க்கவில்லை. தேர்தலில் அதி முக.,வுக்கு ஆதரவாக எனது ரசிக ர்கள் செயல்பட்டது மிகழ்ச்சியளிக்கிறது. இந்த நேரத் தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். முழுநேர அரசியலில் களமிறங்குவீர்களா என்ற கேட்டதற்கு, விரைவில் நான் அரசியலில் அடியெடுத்து வைப்பேன். நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் அதற் கான நேரமும், காலமும் இதுவல்ல என்று கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *