நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த புதிய தகவல் மருத்துவ மனை வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலை திருப்திகரமாக இருக்கி றது. அவரது உடலின் அனை த்து பாகங்களும் சீராக இயங்கி வரு கிறது. மருத்துவமனையில் த னது குடும்பத்துடன் அவர் பொழு தை கழித்து வருகிறார், என்று அவர் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரா மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்து ள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச் சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மருத்துவமனையின் ஏழாவது மாடியில் வி.ஐ .பி., க்களுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுக் குழாய் நோய் தொற்று காரண மாக அவருக்கு காய்ச் சல் இருப்ப தாக வும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாகவும், தொற்று ஏற்படாமல் இருக்க அவர் பார்வை யாளர் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று மருத்து வர்கள் கூறியிரு ந்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் ரஜினிகாந் தை பார்வை யாளர்கள் சந்திப்பது தவிர்க்கப்பட்டது. நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ரஜினி காந்திற்கு இரைப்பையில் அலர்ஜி இருப்பது கண்டறியப் பட்டது. அதற்குரிய மருந்துகள் கொடுக்கப் பட்டன. காய்ச்சல், சளி குறையவும் மருந்து கொடு க்கப்பட்டது. நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்ததால் ரஜினி மூச்சுவிட சிரமப்பட் டார். இதையடுத்து, நுரையீரலில் இரு ந்த நீர் சிகிச்சை மூலம் வெளியேற்ற ப்பட்டது. இதன்பின், சுவாசிப்பது அவருக்கு எளிதா கியுள்ளது. அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ரத்த பரி சோத னைகள் மூலம் உடல் பாக இயக்கம் குறித்து டாக்டர்கள் கண் காணித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளி யிட்ட புதிய செய்திக்குறிப்பில், “ரஜினிகாந்த் உடல் நிலை யில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக உள்ளது. மருத்துவமனையில் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் உடல் நிலை திருப்திகரமாக உள்ள தாகவும், தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்