கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகி றார். கடைசியாக கிடைத்த தகவலின் படி, அவரது சிறுநீரகம் பிரச்சினை செய்ததால், அவருக்கு ‘டயாலிசஸ்’ செய்து வருகின்றனராம்.
ரஜினிகாந்த் நலம்பெற வேண்டி அவ ரது ரசிகர்கள் பலரும் கோவிலில் வழி பாடு செய்து வருகிறார்கள். பிரார் த்தனை செய்து வருகிறார்கள். அவரது நெருங்கிய நண்பர்களும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், ரஜினியின் நண்பருமான அமிதாப் பச்சன் தற்போது இங்கிலாந்தில் தங்கி இருக்கிறார். அங்கு நடைபெறுகின்ற விழாக்களில் தொடர்ச்சியாக கலந்து கொள் வதற்காக அங்கே தங்கியுள்ளார். இதனிடையே ரஜினிகாந்திற்கு உடல்நலமில்லாமல் போனதை அறிந்து வருத்தமடைந்தார்.
அங்கிருந்தபடியே ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினி காந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஜினியின் உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்துள்ளார். அவர் விரை வில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாகவும், தைரியமாக இருங் கள் என்றும் ஆறுதல் கூறினாராம்.
நட்பெனில் இதல்லவோ நட்பு..!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்