சிக்னலில் நிற்காமல் சென்ற கன்னட டி.வி., நடிகை மைத்ரேயியை, டிராபிக் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தியதால், அந்த போலீஸ் காரரை, நடிகை அடித்ததால் கைது செய்யப்பட்டார்.
கன்னடத்தை சேர்ந்த டி.வி., நடிகை மைத் ரேயி. இவர் தனது தோழிகள் சுப்ரியா, ரேகா, ரூபா ஆகியோருடன் காரில் சென்றார். கிரியாஸ் சந்திப்பில் உள்ள சிக்னலில் நிற்காமல் காரை ஓட்டி சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீஸ் சிவக்குமார் மைத்ரேயின் காரை தடுத்து நிறுத்த முற்பட்டார். இரு ந்தும் அவர் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார்.
இதனை யடுத்து சிவக்குமார் அருகில் இருந்த மற்ற போலீசாருக்கு தகவல் கொடு த்தார். சிறிது தூரத்தில் மைத்ரேயின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மைத்ரேயி தனது தோழிகளுடன் சிவக் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றி சிவக்குமாரை அடித்து கீழே தள்ளினார் மைத்ரேயி. இதனை யடுத்து போலீசார் மைத்ரேயி மற் றும் அவரது தோழி உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்