ரஜினியின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனுஷ் ஏமாற்ற காரணம் என்ன????

ரஜினி நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம், லதா ரஜினிகாந்த, அவரது மகள் கள் மற்றும் பலர் அறிக்கை பேட்டி என்று கொடுத்தாலும் ரஜினியின் புதிய புகைப் பட த்தை யாரும் வெளியிடவி ல்லை.

இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் துக்கம் அதிகமாகி தற்கொலை செய்து கொண் டார். தனுஷ் உடனடியாக மருத்துவமனையில் ரஜினி இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி நன்றாக இருக்கிறார். உங்களின் ஆதரவுக்கு நன்றி என்று தனது டிவிட்டர் இணையத்தில் கூறினார்.

அந்தப் படத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, நான் நலமுடன் இருக்கிறேன் என்று கூறுவது போல ரஜினி போஸ் கொடுத்துள்ளார்.

அது இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி இரண்டாவது முறை அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படி ரஜினியின் பழைய போட்டோவை போட்டு ரசிகர்களை தனுஷ் ஏமாற்ற காரணம் என்ன? இப்படி பழைய போட்டோவை போட முன் வந்த தனுஷ் ஏன் ரஜினியின் தற்போதைய போட்டோ வை வெளியிட வில்லை? அப்படி என்றால் ரஜினி போட் டோ எடுத்து வெளியிடும் அளவுக்கு உடல்நிலையில் இல்லையா? இது வரை ரஜினி குடும்பத்தினர்களும் சரி மருத்துவமனை நிர்வாகமும் சரி ரஜினி நன்றாகத்தான் இருக்கிறார் என்று தான் கூறி வரு கிறார்களே தவிர ரஜினியை சந்திக்க வரும் பிரபலங்களை கூட ரஜினியை சந்திக்க அனுமதிப்பதில்லை. அதற்கு உதாரணம் கலை ஞர் ரஜினியை அண்மையில் சந்திக்க வந்த போது இவரை கூட ரஜினியை சந்திக்க அனுமதிக்கவில்லை. என்றும் அதனால் கலை ஞர் கோபமாக குஜராத்திலிருந்து வந்த மோடி சந்திக்கலாம், ஆந் திராவிலிருந்து வந்த சந்திரபாபு நாயுடு சந்திக்கலாம் அவர்களுக்கு எல்லாம் அனுமதி உண்டு எனக்கு அனுமதி இல்லையா? என்று மருத்துவமனை நிர்வாகத்துடன் கோபபட்டு விட்டு திரும்பி சென் றார் கலைஞர் என்று ஒரு செய்தி சிறிது நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்டது (இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை), விஜயகாந்த், சரத்குமார், விஜய குமார் போன்ற திரைப்பட பிரபலங்கள் ரஜினியை பார்க்க சென்றும் பார்க்க அனுமதி இல்லாமல் திரும்பி சென்றனர். இது போன்று பல பிரபலங்களும் ரஜினியை சந்திக்க அனுமதி கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை.

இந்த நிலையில் இப்படி ஒரு போட்டோவை விளியிட்டு கோடான கோடி ரஜினி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். என் இப்படி ஏமாற்ற வேண்டும் அப்படி என்றால் ரஜினியின் தற்போதைய உண்மையான நிலைமை மிகவும் மோசமாகானதாகவா இருக் கிறது என்ற சந்தேகமே வலிவாக எழுகிறது!

இந்த கேள்விகளுக்கு விடை எப்போது …?

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புதிய படங்களை வெளியிடுமாறு தனுஷை கேட்க ஆரம்பித்து இருக்கி றார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி பற்றிய புதிய செய்தி (இதை கிளிக் செய்க)

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *