பசங்க படம் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே வெற்றி நாய கனாக உயர்ந்த நடிகர் விமலுக்கு 4 வது முறையாக திருமணம் நடை பெற உள்ளது. இரண்டாவது பட மான களவாணி படமும் ஹிட் ஆனதால் ஏக குஷியாக இருந்த விமல், எத்தன் பட சூட்டிங்கின் போது தனது காதலி பிரியதர்ஷி னியை திருமணம் செய்துகொண் டார். உறவினரான பிரியதர்ஷினி சென்னையில் எம்.பி.பி.எஸ. படித்து வந்தார். இவர் களது பெண்ணி ன் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு மாப்பிள் ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் அவசரம், அவசரமாக கும்பகோணம் கோயிலில் திருமணம் செய்து, அங்குள்ள ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடக்க வில்லையே என வருத்தப்பட்ட விமலுக்கு, கமலா தியேட்டர் சிதம் பரம், ரசிகர்கள் முன்னிலையில் இரண்டாவதாக திருமண த்தை நடத்தி வைத்தார். அதேபோல எஸ்.பி.முத்துராமன் கையால் மூ ன்றாவதாக ஒரு திருமணம் நட ந்தது. இந்நிலையில் இப்போது நான்காவது முறையாக ரசிகர்கள் முன்னிலையில் காதல் மனைவி பிரியதர்ஷினி கழுத்தில் தாலி கட் ட தயாராகி வருகிறார் விமல்.