சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி நடிகை விஜயலட்சுமி . . .

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழ கி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறு ப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜய லட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன் னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களி லும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத் தில் நடித்தபோது டைரக்டர் – நடிகை என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந் தித்து ஒரு புகார் மனு கொ டுத்தார். 4 பக்க புகார் மனு வில் சீமானுக்கும், தனக் கும் இருந்த உறவு பற்றி விரிவாக எழுதியிருக்கும் விஜயல ட்சுமி, அதில் நானு ம், டைரக்டர் சீமானும் கடந்த 3 ஆண்டுகளாக காத லித்து வந்தோம். திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செ ய்ய மறுப் பதாகவும், இது தொடர்பாக சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வே ண்டும், என்று கூறியிருந்தார். இது பற்றி விசாரணை நடத்த சென்னை வளசரவாக்கம் போலீசுக்கு உத்தர விடப் பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த புகாரை டைரக்டர் சீமான் மறுத்துள்ளார். சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில்,  நடிகை விஜயலட்சு மி புகார் கொடுத்தது பற்றி எங்களு க்கு எந்த தகவலும் இல்லை. விஜய லட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒரு முறை சந்தித்து பேசினார். அது தொட ர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒரு முறை மட்டுமே விஜ யலட்சுமி சீமானை சந்தித்து பேசி னார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல் லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இல ங்கை தமிழ் பெண் ஒரு வரை விரைவில் திருமண ம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக் கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவ ல்கள் பரப்பப்பட்டுள்ளது. யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *