நாய்களின் தேவதையாக த்ரிஷா

தென் இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பீட்டா நிறுவனத்தின் புதிய விளம்பர த்தில் ஆதரவற்ற நாய்களுக்கு ஒரு தேவதையாக திகழ்கிறார் த்ரிஷா. மேலும் தனது ரசிகர்களையும் ஆதர வற்ற நாய்களை தத்தெடுத்து தேவதை யாக மாறுங்கள் என்று அட்வைஸ் பண் ணுகிறார். பீட்டாவின் புதிய விளம்பரத் தில் த்ரிஷா நடித்திருக்கிறார். அதில் த்ரிஷா, பம்பி என ஒரு நாயுடன் தோன்றுகிறார். குட்டியாக தெருக்களில் பம்பி திரிந்த போது பள்ளி மாணவர்களால் துன்புறுத்தப்பட்டு வருகிறது. அப்போ து வாகன ஓட்டி ஒருவர் அந்‌த குட்டி யை மீட்டு பாதுகாக்கிறார். இது போ ன்று விலங்குகளை தத்தெடுத்து மக் கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற் காக த்ரிஷா அந்த விளம்பரத்தில் “வசிப் பிடமற்ற நாயை தத்தெடுங்கள், தேவதையாக இருங்கள்” என்ற வாச கத்துடன் தோன்றுகிறார்.

இதுகுறித்தும், தனது செல்ல நாய் “கேட்பரியை” எப்படி மீட்டார் என்பது பற்றியும் த்ரிஷா சுவாரஸ்யமாக கூறிய தாவது, ஒரு படத்தின் சூட்டிங்கி ற்காக ஐதராபாத் சென்ற போது தான் எனது கேட்பரியை பார்த் தேன். நாங்கள் காரில் சென்று கொ ண்டிருந்தோம், அப்போது ஒரு குட்டி நாய் காய முற்று இருப்பதை பார்த்தேன். அதனால் நடக்க கூட முடிய வில்லை. மேலும் அது மழையில் நனைந்தபடி இருந் தது. பிறகு அந்த குட்டியை மீட்டு, மருத் துவர் ஒருவரிடம் காண் பித்து அதை குணமடைய செய்தோம். அதன் பின் ஒவ்வொரு நாளும் எங்களுடைய படப்பிடிப்பு தளத்தி ற்கு வந்துவிடும். நான் எங்கு போ னாலும் என்னுடன் வரும். இப்படியே ஒரு நாள் என்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டது. பிறகு அந்த குட்டியை என்னுடன் வைத்து வளர்க்க ஆரம்பித்தேன். அத ற்கு கேட்பரி என்று பெயரிட்டு எனது குழந் தையை போன்று பராம ரித்து வருகி றேன்.

இதுபோன்று இந்தியா முழுவதும் தெரு நாய்க ளும், பூனைகளும் தெரு க்களில் உயிர்வாழ போ ராடுகின்றன. அவற்றில் பல பட்டினியால் இறக்கி ன்றன. சில விபத்தில் காயமோ அல்லது இறக்கவும் செய்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அவைகளுக்கு போதுமான நல்ல வசிப்பிடங்கள் இல்லாதது தான். எனவே இதுபோன்ற விலங்குகளை நம் மை போன்றவர்கள் தத்தெடுப்பதன் மூலம் அவைகளிடம் நாம் காண்பிக்கவும், வசிப்பிடம் இல்லாத விலங்குகளை தத் தெடுப்பதன் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *