சமுத்திரகனி: சாட்டையில் நான் . . .

நடிப்பு, டைரக்ஷன், டைரக்ஷன் நடிப்பு என மாறி மாறி தனது திரைபயணத்தை தொடரும் சமுத்திரகனி, தனது நண்ப ரும், டைரக்டரும், தயாரிப்பா ளரும், நடிருமான சசி குமா ரை வைத்து “போராளி” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே டைரக்ஷன் வே லையுடன் சேர்த்து, புதுபடம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்தபடத்திற்கு “சாட்டை” என்று பெயரிட்டுள்ளனர். இப் படத்தை சாலமன் ஸ்டுடியோஸ் சார்பில், டைரக்டர் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அன் பழகன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் பற்றி சமுத்திரகனி கூறியதாவது, சாட்டையில் நான் பள்ளி ஆசிரியராக நடிக் கிறேன். கல்வி கற்று கொடு க்கும் ஆசானின் சிறப்பு எவ் வளவு புனிதமானது என்பதை விளக்கும் படமாக சாட்டை படம் இருக்கும். என்னுடன் யுவன், தம்பி ராமையா ஆகி யோரும் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடிக்க இருக்கின்றனர். விரைவில் இந்தபடம் துவங்க இருக்கிறது. தற்போது நான் சசிக்குமாரை வைத்து போராளி என்ற படத்தை இயக்கி வருகிறேன். எனக்கும் சசிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரு கின்றன. அது உண்மையில்லை, நானும், சசியும் நல்ல நண் பர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *