எனக்கு அம்மாதான் எல்லாமே; அவரால்தான் இந்த சினிமா வாழ்க்கை கிடைத்திருக்கி றது என்று புதுமுக நடிகை நட்சத்திரா கூறியுள்ளார். மாஜி நடிகை சுமித்ராவின் மகள்தான் இந்த நட்சத்தி ரா. வாரிசு நடிகை பட்டிய லில் இணைந்திருக்கும் இ வர், டூ படத்தின் மூலம் நாயகி யாகியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட் டியில், “அம்மா சினிமாவில் பெரிய நட்சத்திரமாக இருந்
தவர். அதனால் எனக்கும் சினிமா ஆசை இருந்தது. அதை அம்மாவிடம் சொன்ன போது, முதலில் மறுத்தார். பின்னர் சினிமா பற்றி என்னிடம் நிறைய பேசி னார். இப்போது நான் ஒரு படத்தில் நாயகி ஆகி விட்டேன். படத்தின் பெயர் டூ. காதல் கதை. 25 வயதுக்குள்ளான இளைஞர்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்னை சுவரா ஸ்யமாக திரைக்கதை ஆகியிருக்கிறது. இப்போதுதான் வந்திருக்கிறேன். அதற்குள் ளாகவே கிளாமரா? குடும்ப பெண் வேடமா? என்ற கேள்வி யெல்லாம் கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. இப்போதைக்கு கதைகள்தான் முக்கியம். இதுதான் சினிமா என நான் புரிந்து கொள்ள காலம் இருக் கிறது. இப்போது ஓரிரு கதைகள் தேர்வில் இருக்கிறது. அது முடிவானதும் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.