கண்ணீருடன் நயன்தாரா . . .

பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவ தாக ஏற்கனவே அறிவித்த நயன் தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த “ஸ்ரீ ராம ராஜ்யம்” படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் நயன்தாரா சினிமா உலத்திலி ருந்து விடை பெற்றார். நடிகர் சிம்பு வுடனான காதலை முறித்து கொ ண்ட பின்னர் தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர் இரு வருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபு தேவா வின் மனைவி ரமலத், ஆரம்பத் தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம் ஏறி னார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடு த்து, அவரை விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத் தார் பிரபுதேவா. இதனால் நயன்- பிரபுதேவா திருமணத் திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா- ரமலத்து க்கும் விரை வில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கை‌யோடு, நயனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.

இந்நிலையில் திருமணத்திற்கு பிற கு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவி த்து, புதுபடங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதே சமயம் தெலுங்கில் முன்புகமிட் ஆகி யிருந்த “ஸ்ரீ ராம ராஜ்யம்” என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார். “ஸ்ரீ ராம ராஜ்யம்” படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித் தார். இத ற்கு இந்து மக்கள் கட்சி கடும்  எதிர்ப்பு தெரி வித்து வந்தது. இருப்பி னும் தொடர்ந்து நடித்து வந்த நயன், இந்தபடத்திற் காக, பிரபுதேவாவை பார்க் கமாலும், அசைவ உணவு களை தவிர்த்தும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இப்படத் தின் கடைசிநாள் சூட்டிங் நடந் தது. இதற்காக காலையிலேயே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நயன் தாரா, சோகமுடன் காணப்பட் டார். காரணம் இதுதான் சினிமா வில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங் முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைக ளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற் றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இரு ந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார். பின்னர் நயன்தாரா வுக்கு படத்தின் நாயகன் பால கிரு ஷ்ணா, ஆறுதல் கூறினார். திரும ணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன், அவர் சம்ம திக்க மாட்டார் என்று வருத்தத் துடன் கூறி னார்.

பின்னர் படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கை கடிகார ங்களையும், நீண்டநாட்களாக தனக்கு மேக்கப் மேனாக இருந்த ராஜூவுக்கு மோ திரம் ஒன்றையும் பரிசு அளித்தார். அதன் பிறகு அனைவருக்கும் விரு ந்து அளித்து கண்ணீர் மல்க சினி மாவிலிருந்து விடைபெற்றார் நயன்தாரா.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *