என்ன ஏது என்று விசாரிக்காமலேயே…..? – ஜெனிலியா

ஏதாவது ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் திருமணம் செய்து கொள்வது போல, படுக்கையில் இரு ப்பது போல அல்லது முத்தம் கொ டுப்பது போல புகைப்படங்கள் முத லில் வெளியான உடன், இரு வரும் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு கிளம் பும்.

அடுத்த இரு தினங்களில், அந்த ஸ்டில் படத்தில் வரும் ஒரு காட்சி என்பது தெரிய வருவதற்குள், வேறு பரபரப்பு வந்து அதை மறக் கடித்துவிடும். தமிழ், பாலிவுட் சினிமாக்களில் வெளியாகும் ஹீரோ ஹீரோயின் கிசுகிசுக்களின் தன்மை இப்படித்தான் உள்ளது. அசின், த்ரிஷா, பிபாஷா பாசு போன்ற வர்கள் இதற்கு முன்பு இப்படி கிசுக்கப் பட்டார்கள். ஆனால் இன்னமும் அதே ரக கிசுகிசுக்கள் அவர்களைத் துரத்திக் கொ ண்டுதான் உள்ளன.

இப்போது ஜெனிலியா சிக்கியுள்ளார் இந் த ரக கிசுகிசு ஒன்றில். அவருக்கும் பா லிவுட் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாமு க்கும் திருமணம் நடந்து விட்டதாகக் கூறி ஒரு படத்தையும் வெளியிட்டு ள்ளனர் பத்திரிகை மற்றும் இணையங் களில். இதைக் கேள்விப்பட்டதும் கடுப் பான ஜெனிலியா, “போர்ஸ் என்ற படத்து க்காக எடுக்கப்பட்ட ஸ்டில் அது.

புரோகிதரை வைத்து நிஜ திருமணம் போலவே அந்தக் காட்சியை எடுத்தனர். ஆனால் அது சினிமா காட்சி என்று புரோ கிதருக்கு சொல்லவில்லை போலிருக்கிறது. அதற்காக என்ன ஏது என்று விசாரிக் காமலேயே செய்தி வெளியிட லாமா?” என்றார். ஜெனிலி யா வுக்கும் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலிப்பதாகவும் விரை வில் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்தி வெளியாகி யுள்ளதும், அதை ஜெனிலியா மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *