சினிமாவை விட்டு நான் விலக மாட்டேன்: நயன்தாரா

ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சி வசப் பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப் போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன் தாரா கூறியுள்ளார். நயன்தாரா வுக்கும் பிரபு தேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திரும ணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது. தெலுங் கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப் பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப் பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி அழுததும், படக் குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச் செய் திகள். இது அழுகை யும் பிரியா விடை யும் சினிமாவுக்கும் சேர்த்து தான் என்று கூறப்பட்டது. அப்போது செய்தி களுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இரு ந்த நயன்தாரா, இப்போது சினிமாவை நான்விலக மாட்டேன், என்று கூறி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறு கையில், “நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ் ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு. என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது. இன்னொரு பக் கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவி னர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப் பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான் நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன்”, என்றார். எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க… அடுத்த செய்தி பிரபுதேவா விடமிருந்து நயன் விலகல் என்று வரக் கூடும்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *