“மிதமான” உணவு… “இதமான” பயிற்சி!” : -ஃபிட்னெஸ் அனன்யா

நாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே… அதே அனன்யா தான்!

 ‘ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று ஆச்சர் யப்படுபவர்களே… ‘எப்படி இருந்தவர் இப்படி ஆகி ட்டார்’ என்று வியப்பூட்டும் வேக த்தில் உடல் எடையைக் குறை த்திருக்கிறார் அனன்யா.

”ஒண்ணு, ரெண்டு இல்லை… 12 கிலோ வெயிட் குறைச்சேன். வா யைக் கட்டி, வயித்தைக் கட்டின்னு சொல்வாங்களே… அது எவ்வளவு கஷ்டம்னு இந்த ரெண்டு மூணு மாசத்துல அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்!”-கன்னக் குழிகள் கபடி ஆட,  சிரிக்கிறார் அனன்யா.

”மலையாளத்தில் ‘பாசிட்டிவ்’ படத்தில் நான் அறிமுகமான சமயமே, உடம்போட ஷேப் பே தெரியாம கொழுக்மொ ழுக்னு இரு ப்பேன். கலகல ன்னு எப்பவும் அரட்டையடிச் சுட்டே இருப்பதால், அந்த கேரக்டர் எனக்கு செட் ஆகு ம்னு நடிக்கவெச்சாங்க. அந் தப் படம் பார்த்துட்டுதான் ‘நாடோடிகள்’ படத்துக்காக சமுத்திரக்கனி சார் கூப்பிட் டார். கோடம்பாக்கத்தில் அறி முக மாகும் சந் தோஷ த்தில் என் போட்டோ ஆல்பத் தை கனி சாருக்கு அனுப்பி னேன். அதுல தஸ்ஸு புஸ்ஸு னு நான் பப்ளிமாஸா இருந்த தைப் பார்த்துட்டு, அவருக்கு மயக்கமே வந்துடுச்சாம். ‘என க்கு குண்டான ஜோடின்னு சொன்னீங்க. ஆனா, இவ் வளவு குண்டுன்னு சொல்ல லையே’ ன்னு சசிகுமார் சாரு ம் ரகளை பண்ணிட்டாராம். இது கேள்விப்பட்டதும் எனக்கு சங்டமா ஆயிருச்சு. ஜிம்ல வொர்க் அவுட் பண்ண ஆர ம்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் என் நண்பர் ஒருத்தர், ‘இப்போ அனன்யாவை நேர்ல பாருங் க’ன்னு சொல்லி, கனி சாரை கன்வின்ஸ் பண்ணி யிருக்கார். நான் நேர்ல போய் நின்னதும் என்னை ஆச்சர்யமாப் பார்த்தவர், ‘உடம் பைக் குறைக்க, கூட்ட கேரளாவில் எதுவும் மந்திரம் கத்துக்கொடுக்கிறாங்களா?’ன்னு சிரிச்சார். ‘நாடோடிகள்’ படத்தில் நடிக்கத் தேர்வானேன்.

என்னோட பயிற்சியாளர் தாம்சன் சொன் னபடி ‘பாசிட்டிவ்’ படத் துக்குப் பிறகு, ‘நாடோ டிகள்’ படத்துக்காக 10 கிலோ எடை குறைச் சேன். இப்போ, 12 கிலோ எடை குறைச்சிருக்கேன். எப்பிடி?” என்று புருவ ங்களை மட்டும் பாலே ஆடவைத்து விசாரிப் பவர், அதற் காகத் தான் மேற்கொண்ட வழிமுறைகளைப் பட்டியல் இட்டார்.

”நொறுக்குத் தீனிகளுக்குத் தடா போட்டதுதான் முதலும் முக்கிய முமான காரணம். அதோட ஜிம், யோகான்னு ரொம்ப வரு ஷம் சொகுசா இருந்த உட ம்பைப் படுத்தி எடுத்துட்டேன். ஆனா, நானே எதிர்பார்க்காத அளவுக்கு வெயிட் குறை ஞ்சது எனக்கே ஆச்சர்ய மான விஷயம்!” என்கிறார் ஜிம்முக்குள் நுழைந்தபடியே.

”ஜிம்ல எல்லாப் பயிற்சிகளையும் பண்ணுவேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான பயிற்சிகள் பண்ணுவதால், சீக் கிரம் டயர்ட் ஆக மாட்டே ன்.  ஷூட்டிங் இல்லாத நாட் களில், அதி காலை சூரிய நமஸ் காரம் நிச்சயம். நல்லா சாப்பிடுற காலத் தில்கூட நான் இவ்வளவு பயிற்சிகள் பண்ணியது இல்லை. ‘நீச்சல் கத்துக்கிட்டா, உடம்பை எப் பவுமே ஸ்லிம்மா வெச்சு க்கலாம்’னு அம்மாவும் அப்பாவும் சொல்றாங்க. அவங்க ரெண்டு பேருக்குமே நீச்சல் தெரியும். ஆனா, எனக்குத் தண்ணி ன்னா பயம். இப்போ தான் பயம் விலகி… கத்துட்டு இருக்கேன். நிஜத் திலும் நான் ‘நாடோடிகள்’ நல்லம்மா மாதிரிதான்.

ஏதாவது நொறுக்குத் தீனியை அரைச்சுக்கிட்டே இருப்பேன். ஆனா, இப்போ ரெண்டு வரு ஷமா எண்ணெய்ப் பதார்த்த ங்களை அடியோடு நிறுத் திட்டேன். கொழுப்பு மிகுந்த எந்த உணவுக்கும் என் மெனு வில் இடம் இல்லை. அதே மாதிரி, டயட் இருக் கணு ம்னு முடிவு பண்ணதுமே, நான் செஞ்ச முதல் வேலை, அரிசிச் சாப்பாட்டை நிறுத் திய துதான். சாதத்தைத் தொட்டு ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு. காலையில் பழங்கள், மதியம் அரிசி தவி ர்த்த உணவுகள், ராத்திரி பச் சைக் காய்கறிகள் அல்லது ஜூஸ்னு ரொம்ப சிம்பிள் மெனு. உணவு வி ஷயத்தில் கட்டு ப்பாடா இருந் தாலே, உடம்பு ஒழுங்குக்கு வந்துடும். ‘பசியோடு உட்கார்ந்து பசி யோடு எழணும்’கிறது உடம்பைக் குறைக்க நினைக்கிற வங்க நல்லா மனசுல ஏத்திக்க வேண்டிய விஷயம்!”

முகத்துக்கு..?”

”நேரம் கிடைக்கிறப்ப, பியூட்டி பார்லர் போவேன். முகத்தை அடிக் கடி தண்ணி யில் கழுவுவேன். வித விதமான க்ரீ ம் களைப் பயன் படு த்த மாட்டேன். ஷூ ட்டிங் இல்லா த நாட்களில் தேங் காய் எண் ணெயை முகத் தில் தடவி கொஞ்ச நேரம் கழி ச்சுக் கழுவு வேன். முகத்தைப் பொறுத்தமட்டில், எண்ணெய் பிசுபிசுப்பும் இரு க்கக் கூடாது. அதே நேரம், வறட்சியாகவும் இருக்கக் கூடா து. காயாவும் இல்லாம, பழமாவும் இல்லாத பப்பாளியை அரைவெட்டுக் காய்னு சொல் வாங்க. நம்ம முகம் அந்த மாதிரி தான் இருக்கணும்!”

நேற்று பப்ளிமாஸ்… இப்போ பப்பாளிமாஸா?!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *