தலையில் டை அடிக்கிற வர்க்கம் மட்டும், முதல் இடம் நாயகியான கவிதா நாயரை அந்த காலத்து சரோஜாதேவி மாதிரி இருக்காங்களே என்று வியக்க, இளசுகள் ஏரியாவில் உதட்டை பிதுக்குகிறார்கள். ஆனால் தன் படத்தின் ஹீரோயின் தேடிய கதையை படத்தின் டைரக்டர் பி.குமரனே விளக்கினார்.
அப்புறம்தான் தெரிந்தது, ஆஹா அது பெரிய இடம் என்று. இந்த படத்திற்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த போது மீடியேட்டர்கள் மூலமாக நிறைய ஸ்டில்கள் வந்தன. அதில் இந்த பெண்ணி ன் கண்களும் அழகும் எங்களை கவர்ந்தது. விசா ரித்தால் பிரபல மலையாள இயக்குனர் ஹரி ஹரன், தான் இயக்கப் போகும் புதுப்படத்திற்காக அவரை தேர்வு செய்து வைத்திருந்த விபரம் தெரிந்தது.
ரொம்ப இயற்கையாக இருக்க வேண்டும் என்று மேக்கப் போடாமல் வீட்டில் நிற்க வைத்து அவரே எடுத்த போட்டோ தான் எங்கள் பார்வைக்கு வந்தது. நாங்கள் இந்த பெண்ணை அணுகி கேட்டபோது, ஹரிஹரன் சார் ட்ட கேட்கணும். அவர் சம்மதித்தால்தான் நடிக்க முடியும் என்று சொல்லிவிட்டார். அப்புறம் ஏ.வி. எம். படத்தில் அறிமுக படுத்துகிறோம் என்பதை யும், படத்தின் முழு கதையையும் அவரிடம் சொல் லிதான் சம்மதிக்க வைத்தோம் என்றார் பி.குமரன்.
சரி போகட்டும்… படம் எப்படி போகுதாம்? எல்லா இடத்திலே இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ். நான் எப்படி கதை சொன்னேனோ, அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கேன் என்று ஏ.வி.எம் சரவணன் ஐயா ரொம்ப பாராட்டினார். பொதுவா ஒரு படம் முடியும்போது அந்த படத்தின் டைர க்டரும் தயாரிப்பாளரும் எலியும் பூனையுமா இருப்பாங்க.
ஆனால் இப்பவும் எனக்கு ஏவிஎம் -ல் கொடுக்கப்பட்ட ரூமைதான் பய் ன்படுத்துகிறேன். ஐயாவை தினமு ம் பார்த்து பேசுறேன். இதிலேர்ந்தே நீங்க தெரிஞ்சுக்கலாம் என்றார் பி.குமரன். படம் முழுவதும் தஞ்சாவூரில் எடுக்கப்பட்டாலும், பெரிய கோ வில், அரண்மனை என்று வழக்கமான விஷயங்களை காட்டாமல் கிராம புறங்களையும் அவர்கள் வாழ்க்கையும் காட்டியதுதான் திருப்தி என்கிற குமரனுக்கு ஒரே ஒரு ஆசை.
இந்த படம் நல்லா ஓடணும். எனக்காக மட்டுமில்ல. ஏவிஎம் என்ற பெரிய பாரம்பரியம் மிக்க கம்பெனி என் னை போல புதுமுகத்திற்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். இந்த படத்தின் வெற்றி இன்னும் பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க வைக்குமல்லவா? அதற்காக தான் என்றார் கண்களில் ஆர்வம் மின்ன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …(vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)