பாலியல் புகார்:வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை;போலீசார் மறுப்பு

நடிகை சோனா நேற்று போலீஸ் கூடுதல் கமிஷனரை நேரில் சந் தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது எஸ்.பி.பி. சரண் மீது விளம்பரத்துக் காகவோ பணத்துக்காக வோ பாலியல் புகார் கூற வில்லை என்றார். தன் னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்து கொண்ட தற்கான வீடியோ ஆதா ரம் இருப்பதாகவும் அதை கமிஷனரிடம் கொடுத்து இருப்பதாகவும் தெரிவி த்தார்.
இதையடுத்து இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. வீடியோ ஆதாரம் எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்ல சோனா மறுத்து விட்டார்.
இந்த நிலையில் சோனா வீடியோ ஆதாரம் எதுவும் தரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட உள்ள து. வீட்டுக்கு சென்ற பின் வீடியோவை உதவியாள ரிடம் கொடுத்து  விடுவ தாக சோனா கூறினார். ஆனால் இதுவரை வீடி யோ ஆதாரத்தை அனுப் பி வைக்க வில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவி த்தார்.
இது பற்றி சோனாவிடம் கருத்து கேட்க முயன்றபோது அவரது செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகவே தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக சோனா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமரச பேச்சு வார்த்தைகளை சோனா வீடியோவில் பதிவு செய்து இருப்பதா கவும் கூறப்படுகிறது.
news in malaimalar

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *