சோனா, வீடியோ ஆதாரத்தை கமிஷனரிடம் கொடுத்தார்

சரண் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில், அதற்கான வீடி யோ ஆதாரத்தை போலீஸ் கமிஷ னர் திரிபாதியை நேரில் சந்தித்து வழங்கினார் நடிகை சோனா. பிர பல பாடகரும், தயாரிப்பாளருமா ன எஸ்.பி.பி.சரண், மானபங்கம் செய்ததாக, நடிகை சோனா, பாண் டிபஜார் போலீசில் புகார் கொடுத் தார். போலீசார், பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சரண்மீது வழக்கு பதிவுசெய்து விசாரி க்கின்றனர். எஸ்.பி.பி.சரண், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில் சரண் பகிரங்க மன்னிப்பு கேட் க வேண்டும் என்றும் இல் லாவிட்டால் வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும், விதித்த கெடு விற்குள் சரண் மன் னிப்பு கேட்காவிட்டால், சரண் அத்துமீறி நடந்து கொண் டதற்கான வீடியோ ஆதா ரத்தை வெளியி டுவேன் என்று நேற்று முன்தினம் கூறியிருந் தார். ஆனால் சரண் இதுவரை மன்னிப் பு கேட்கவில்லை.

இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந் த சோனா, கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ ஆதாரத் தை கொடுத்தார். பின்னர் செய் தியாளர்களின் கேள்விக ளுக்கு பதிலளித்தார். அப் போது பெண்ணாகிய நீங்க ள் மதுவிருந்தில் கல ந்து கொள்ளலாமா என்று கேட் டதற்கு, சினிமாவில் இதுபோன்ற விருந்து நிக ழ்ச்சிகள் சகஜமானது. வெ ங்கட்பிரபு எனக்கு ஒரு படம் கொடுப்பதாக கூறி யிருந்தார். அதுனால் அவ ருடைய அழைப்பை ஏற்று இந்த விருந்தில் கலந்து கொண்டேன். ஆனால் நான் மது அருந்த வில்லை வெறும் சாப்பாடு மற்றும் குளிர்பானம் மட்டுமே அருந் தினேன். மது அருந்தும் பழக்கம் முன்பு இருந்தது. இப்போது அதை விட்டுவிட்டேன் என்றார்.

சரண் மன்னிப்பு கேட்டால் புகாரை வா பஸ் பெறுவது குறித்த கேள்விக்கு பதி லளித்த சோனா, மன்னிப்பதுதான் மனி த மாண்பு. நடந்த தவறை ஒப்புக்கொ ண்டு சரண் மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சினையை இத்தோடு விட்டுவிடு வேன். இல்லையென்றால் அதுவரை நான் ஓயமாட்டேன். வீடியோ ஆதாரத் தை கொடுத்து இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை வற்புறுத்துவே ன்.

எஸ்.பி.பி.சரணின் தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு நல்ல மனிதர். அந்த நல்ல மனிதருக்கு எஸ்.பி.பி.சரண் ஒரு மோசமான மகனாக பிறந்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக எஸ்.பி. பால சுப்பிரமணியம் என்னை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள் ளார். அவரை சந்திப்பேன் என்றார்.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *