என் படத்தில் வடிவேலா… ?????????

நான் அடுத்து இயக்க போகும் படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக வந்த செய்தி உண்மையில்லை என்று கூறுகிறார் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி. தமிழில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறி, விஜயகாந் தை தமது பேச்சால் வெளு த்து வாங்கிய வடிவேலு, தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா… என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகளும் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுந்தர்.சி படத்தில் வடி வேலு நடிக்கப்போவதாக தகவல் வெ ளியானது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த வின்னர், கிரி உள்ளிட்ட படங்கள் வடிவேலு கா மெடிக்காவே மாபெரும் வெற்றி பெற் றன. இதனால் சுந்தர்.சி படம் மூலம் வடிவேலு மீண்டும் புத்துயிர் பெறப் போவதாக கோலிவுட்டில் வட்டார த்தில் பேசப்பட்டது. இந்நிலையில் வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக் கவே இல்லை, அதுவெறும் வதந்தி தான் என்று கூறியுள் ளார் சுந்தர்.சி.

இதனிடையே தேர்தலில் அநாகரிமாக பேசியதே வடிவேலுவுக்கு வாய் ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்றும், இப்போதும் வடிவேலு வுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதாகவும், ஆனால் அவரை வைத்து படம் எடுக்க தான் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்குவதாகவும் கோலி வுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.வடிவேலுவுக்கு மீண்டும் எப்போது நல்லகாலம் வருமோ…?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *