படப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .

அடடா என்ன அழகு, “நாய்க்குட்டி, “ஆறுமனமே போன்ற படங்களில் நடித்தவர் நிக்கோல். தற்போது சோனியா அக ர்வாலுடன் ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தில் நடித்து வந்தார்.

ராஜ்கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். பட ப்பிடிப்பில் சம்பள பிரச்சினையால் இயக்கு னருக்கும், நிக்கோலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் நடிக்க மறுத்து நிக்கோல் மும்பை சென்று விட்டார்.

இது குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறி யதாவது:

நிக்கோலுக்கு 1 1/2 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிக்க அழைத்து வந்தேன். நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து சாப்பாட்டு செலவுகளையும் கவனித்துக் கொண் டோம்.

ஆனால் படப்பிடிப்பில் எங்களுக்கு ரொம்ப தொல் லை கொடுத்தார். நெல் லூரில் நடந்த படப்பிடிப்புக்கு அழைத்த போது தோல் அலர்ஜியாக இருக் கிறது என்றார். தயாரிப்பு நிறுவனம் அவரை பத்திரமாக கவனித்துக் கொண்டது.

நிக்கோலுக்கு பிரத்யேகமாக 18 உடைகள் எடுத்து வந்தோம். அவற்றை அணிய மறுத்தார். தனக்கு புதிய டிசைனர் வேண்டும் என்றார். ஏழு நாட்கள் நடி த்துள்ளார்.

இன்னும் ஆறுநாள் பாக்கி உள்ளது. சம்பளத்தில் 1 லட் சம் ரூபாய் கொடுத்து விட்டோம். திடீரென்று மீதி 50 ஆயிரம் ரூபாயை தந்தால்தான் நடிக்க வருவேன் என அடம் பிடித்தார்.

நாங்கள் 25 ஆயிரம் ரூபாய் செக்காக கொடுத்து மீது பணத்தை படப்பிடிப்பு முடிந்ததும் தருவதாக வாக் குறுதி அளித்தோம். அதற்கு உடன்படவில்லை.

நிக்கோலுடன் கோவை சரளா, மனோபாலா ஆகியோர் இணைந்து நடி த்தனர். நிக்கோலுக்காக அவர்கள் படப்பிடிப்பில் காத்து இருந்தார்கள்.

ஆனால் நிக்கோல் படப்பிடிப்புக்கு வராமல் விமானத்தில் புனே புறப்பட்டுச் சென்று விட் டார். அவரால் எங்களுக்கு ரூ.9 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. நிக்கோல்மீது தயாரிப் பாளர் சங்கத்தில் புகார் செய்யப் படும். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம். இவ்வாறு ராஜ் கிரு ஷ்ணா கூறினார்.

இதுகுறித்து புனேயில் உள்ள நிக்கோலிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ராஜ் கிரு ஷ்ணா குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அவர் கூறியதாவது: எனக்கு பேசியபடி சம்ப ளம் கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் என் கா ட்சிகளை எடுக்காமல் சும்மா உட்கார வைத் தனர். 10 நாட்கள் கால்ஷீட் கேட்டு 5 நாட்கள் சூட்டிங் நடத்தினார்கள்.

எனது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்ல கார் கேட்டபோது தர மறுத்து இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டனர். நடந்துதான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனேன். சம்பளம் தராததால் ஊருக்கு திரும்பி விட்டேன். இவ்வாறு நிக்கோல் கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *