தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடி கை சினேகாவுக்கும், நடிகர் பிரச ன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத் துடன் விரைவில் திருமணம் நட க்கிறது. இதனை நடிகர் பிரசன்னா வே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத் தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்க ளாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய் து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவ ரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித் துள்ளனர்.
இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் இரு வருக்கும் நிச்சயதார்த்தம் நட க்கவுள்ளது.
இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது:
சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங் கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே முறைப்படி அறிவிக்கிறோம்,” என்றார்.
வாழ்த்துக்கள்!