ஸ்ரீவித்யா
தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும், தளபதியில் அம்மா வாகவும் நடித்தார்.
சுஜாதா
அவர்கள் படத்தில் மனைவியாக நடித்த இவர் கொடி பறக்குது, உழைப்பாளி போன்ற படங்களில் அம்மா வாக நடித்தார்
லட்சுமி
நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிக்கு மனைவியா கவும், படையப்பா படத்தில் அம்மாவாகவும் நடித்தார்.
ஜெயசுதா
அபூர்வராகங்களில் மகளாக நடித்த இவர் பாண்டிய னி ல் அக்காவாக புரமோஷன் பெற்றார்.
விஜயசாந்தி
நெற்றிக்கண்ணில் மகளாக தங்கையாக நடித்து மன் னனில் மனைவி யாக உயர்ந்தார்.
மீனா
அன்புள்ள ரஜினிகாந்த்தில் ரஜினியால் கொஞ்சப்படும் சிறுமியாக நடித்து விட்டு எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் காதலியாக, மனைவி யாக நடித்தார்.
எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராயும், சிவாஜியில் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவும் எதிர்காலத்தில் ரஜினியின் பாட்டியாகவும், அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது.
அரசியலில் மட்டுமல்ல…
சினிமாவிலும் எது வேண்டுமா னாலும் நடக்கும்.