ஆட்சிமாற்றம் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுள்ளன. புதிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்குவதில் பின்தங்கி விட் டது.
சன் கடைசியாக வாங்கிய ‘வாகை சூடவா’ மற்றும் ‘வெடி’ ஆகிய இர ண்டு படங்கள்தான். தற்போது ‘தெய்வத்திருமகள்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் ‘ராஜபாட்டை’ படத்தின் ஒட்டுமொத்த விநி யோக உரிமையை வாங்கியது சன்.
இந்தப் படம் ஒரு பக்கா மசாலா என்பதால் கட்டாய வெற்றி என்பதை அவதாணித்து படத்தை வாங்கியது. முக்கியமாக தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் கவர்ச்சிப் புயலான தீக்ஷா சேத் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாவதை தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக் கிறார்கள்.
அதேபோல விக்ரமுடன் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா, ரீமாசென் ஆகிய இரண்டு கவர்ச்சி நாயகிகள் செம த்தியான குத்தாட்டம் போட்டிருகிறா ர்கள்.
இது போதாதென்று மற்றொரு பாடலுக்கு ஷலோ னியுடன் குத்தாட்டம் போட்டு இருக்கிறார் விக்ரம். இந்த அம்சங்களை மனதில் வைத்தே ‘ராஜபாட்டை’ படத்தை வாங்கியது.
ஆனால், சன் பிக்சர்ஸ் விநியோ கத்தில் இதற்கு முன்பு வெளியா ன படங் களுக்கான கணக்கை சரி செய்யாத வரை, இனிமேல் சன் பிக்சர்ஸ் படங்களை வெளியிட போவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்து, துணிச்ச லாக போர்கோடி தூக்கி இருக் கிறார்கள்.
இதனால் ‘ராஜபாட்டை’ படத்தின் விநியோக உரிமையிலிருந்து நேற்று திடீரென விலகிவிட்டது சன் பிக்சர்ஸ். தற்போது இந்தப் படத்தை ராடன் டிவி வெளியிடலாம் என்கிறார்கள்.