முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை

வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ள டேம் 999 என்ற படத்தை உருவாக்கி, தமிழக மக்களை பூச்சா ண்டி காட்டும் மலையாளி? 

கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரி யாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய், 

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடி யப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத் தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறி சர்ச் சையை கிளப்பி இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார் த்தி நடித்துள்ளனர். A. R. ரகுமான் இசைதட்டை வெளியிட்டார்.

பென்னி குக் என்ற ஆங்கிலேயர், தன் சொத்துக்களை எல்லாம் விற் று முல்லை பெரியாறு அணையை கட்டினார். நூற்றாண்டை கடந்து இருக்கும் இந்த அணை, தமிழ் நாட் டின் ஜீவாதார அணைகளில் ஒன்று .

இந்நிலையில் அணை வலுவிழந்து உள்ளதாகவு ம், உடையும் அபாயத்தி ல் இருப்பதாகவும், உட னே அணையை உடைத் து, புது அணை கட்ட வே ண்டும் என்று கூறி வரு கிறது கேரள அரசு.

மேலும் அதற்கான முயற்சியிலும் அம்மாநில அரசு இறங்கியிருக்கிறது. கேரளாவின் இந்த செயலுக்கு தமிழ கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக் கிறது. இதுதொடர்பான வழக்கும் நீண்ட நாட்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கேரளா சேர்ந்த டைர க்டர் சோஹன் ராய், ஆங்கிலத்தில் டேம் 999 என்ற பெயரில் ஒரு பட த்தை இயக்கியுள்ளார்.

இந்தபடம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தவாரம் வெளியாக இருக்கிறது. படத்தில் அணை உடைவது போலவும், அதிலி ருந்து வெளியாகும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட் டுள்ளது.

மேலும் 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அ ணை யை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும் என்பது போல் இப்படத்தில் காட்சி கள் அமைக்கப்பட்டு இருப்பது சர் ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

படம்குறித்து டைரக்டர் சோஹன் ராய் அளித்துள்ள பேட்டியில், சீனா வில் 1975ம் ஆண்டு பான்கியோ என் ற அணை உடைந்த போது சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

அதே அபாயம் இப்போது 100 ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியா று அணைக்கும் ஏற்பட்டுள்ளது. அரசிய ல் பிரச்சனை காரணமாக இந்த விவ காரத்தில் எந்த ஒரு முடிவு எட்டப் படவில்லை.

இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலு ம், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லை ப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும்.

முல்லைப் பெரியாறு அணை உடை ந்தால் மடியப்போவது தமிழக மக்க ள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, முல்லைப் பெரியாறு அணை யை உடைத்து, புதிய அணையை கட் டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக் கும் என்று கூறியுள்ளார். 

தமிழக-கேரளா இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் பிரச்சனையாக இருந்துவரும் வே ளையில், சோஹன் ராயின் டேம் 999 படமும், அதற்கு அவர் கொடுத் துள்ள பேட்டிம் பெரும் சர்ச்சையை ஏற்ப டுத்தியுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *