இனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா

கோ’ படத்தில் நடித்ததுபோல படுகவர்ச்சி யான கேரக்டரில் இனி நடிக்க மாட்டேன் என்று பியா கூறினார். இதுபற்றி பியா கூறியதாவது: ‘பொய் சொல்லப் போறோ ம்’, ‘கோவா’, ‘கோ’ உள்பட தமிழில் 5 பட ங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு திருப் பமாக அமைந்த படம் ‘கோ’. அதில் படு கவர்ச்சியான கேரக்டர். அதற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ‘கோ’ பட கேரக்டரின் ஜெராக்ஸ் போலவே வந்தன. ஒப்புக் கொண்டிருந்தால் நல்ல திருப்பம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரே பாணியி லான வேடத்தில் நடிக்க விருப்பமில்லை. ‘கோ’வில் ஏற்று நடித்த ‘சரோ’ வேடம் போல் மறுபடியும் நடிக்க மாட் டேன்.

மலையாளத்தில் ‘மாஸ்டர்ஸ்’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறேன். இப் படம் ஜனவரி யில் வெளியாகும். விரைவில் மற்றொரு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். இந்தி யில் ஒரு படம் நடித்து முடித்திருக் கிறேன். பாடல்கள் மட்டும் பாக்கி. ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லக்கூடாது என்று இயக்குனர் கூறியுள்ளார். தயாரிப்பாளர் தான் அதிகாரபூர்வமாக அறிவிப்பார். இதில் பிரபல நடிகருடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து இந்தி, மலையாளத்தில் நடிக்க ஒப் புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் நல்ல வாய்ப்பு வந்தால் நடிப்பேன். இவ்வாறு பியா கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *