கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் !
விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்!
“கலைமாமணி” கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர்

இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது.

இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து… விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் விளங்கியவர். அவரின் பெயர் முத்து என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆனால் விழா வேந்தர் என்று சொல்லுங்கள் என் .கே. டி. முத்து என்று சொல்லிவிடுவார்கள்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இராமாயணம் , மகாபாரத நாட்குறிப்புக்களை (டைரி) காதி பவனில் வாங்கி தன்னை சந்திக்க‍ வருகிற அன்பவர்களுக்கு காலண்டருடன் பரிசளித்து மகிழ்வதை அரை நூற்றாண்டாகச் செய்து வருகிறார்.

பொங்கல் திருநாளன்று இவரது அலுவலகமான சுரேஷ் பர்னிச்ச‍ர் வளாகத்தில் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் விருந்தளிக்கும் உன்ன‍த சேவையை இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார்.

உரத்த‍ சிந்தனை அமைப்பு கலை இலக்கியப் பணிகளை மட்டுமே செய்து வந்தபோது. . . அதன் இலக்கை சமுதாயம் பக்க‍ம் திசை திருப்பிய வழிகாட்டி இவர்.

எந்த ஒரு விழா எடுத்தாலும் அது பயனுள்ள‍தாக இருக்க‍ வேண்டும் . அவ்விழாவின் மூலம் ஏதாவது ஒரு அறப்பணி செய்ய‍ வேண்டும். அதற்காக விழா செலவுகளில் 20 சதவிகிதம் ஒதுக்க‍ வேண்டும். என்று உரதத சிந்தனைக்கு உருப்படியான உபதேசம் செய்த உயர்ந்த சிந்தனையாளர்!

அந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் உரத்த‍ சிந்தனை விழாக்க ளில் கல்வி உதவி, மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிற து. உரத்த‍ சிந்தனை தொட ங்கி வைத்த‍ இந்த உதவிப்பணியை இன்று எல்லா ஊர்களிலும் தொண்டுள்ள‍ம் கொண்டவர் கள் தொடர்ந்து செய்து வருவது உரத்த‍ சிந்தனைக்குப் பெருமை தான். ஆனால் அதற்கு நாம் நன்றி சொல்ல‍ வேண்டியது கோபால அய்ய‍ர் முத்து (ஜி முத்து) விற்குத்தான்.

அப்ப‍டியானால் ! அது என்ன‍ முத்துக்கு முன்னால். . . என் கே.டி., – திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளிவளாக மையத்தில் நாள் தோறும் விழா நடத்தி வந்ததால் கோபால முத்து என் கே.டி. முத்து ஆனார்.

உரத்த‍ சிந்தனையின் சகோதர அமைப்பான நல்லோர் வங்கியின் ஆதார ஸ்ருதி யாரென்றால் அது என்.கே.டி. முத்துதான்.

அவருடைய உரத்த சிந்தனைகளை உள்வாங்கி உருவான நல்லோர் வங்கி என்ற சமூக அமைப்புக்கு இன்று வயது 20.

மருத்துவ உதவி, கல்வி விழிப்புணர்வு, கல்வி உதவி ஆன்மீகச் சுற்றுலா இல்ல‍ந்தோறும் சந்திப்பு, சமூக விழிப்புணர்வு என்று பரந்து விரிந்திருக்கிற நல்லோர் வங்கி தொடங்கப்பட்ட‍ இடம் சுரேஷ் பர்னிச்ச‍ணர் அலுவலகம்.

செல்வி ஜெயலலிதா முதன் முறையாக பதவியேற்ற‍போது, எழுத்து, இலக்கியம், இசை, நாடகம், சமூக சேவைத் துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களை உரத்த‍ சிந்தனை அமைப்பு பாராட்ட‍ நினைத்த‍ போது. . . ஏழு சிறந்த பெண்மணிகளுக்கு பெருமைக்குரிய பெண்மணி விருது வழங்கியவர் அம்மா அரசின் முதல் சமூக நலத் துறை அமைச்ச‍ர் புலவர் இந்திர குமாரி அந்த விழாவை நேர்த்தியாக ஏற்பாடு செய்தவர் விழாவேந்தர்.

2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட‍ போது உரத்த‍ சிந்தனை ஒரு எளிய விழாவை ஏற்பாடு செய்ய‍ நினைத்து, அதாவது 1990 – 2000, இந்த பத்தாண்டுகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பாராட்ட‍ப்பட்ட‍ட பத்து துறை கலைஞர்களை பாராட்ட‍ நினைத்த‍து.

காதல் கோட்டை, அகத்தியன் (சினிமா), அரட்டை அரங்கம் விசு (பேச்ச‍ரங்கம்), நேருக்கு நேர் – ரவி பெர்னார்டு (நேர்காணல்) திரு. மலைச்சாமி, ஐ.ஏ.எஸ். டி. ராதாகிருஷ்ணன், ஐ.பி.எஸ்.(நிர்வாகம்), கிரேசி மோகம் (நாடகம்), எம்.எஸ். உதயமூர்த்தி (இளைஞர் மேம்பாடு), உதவும் கரங்கள் வித்யாசாகர் (சமூக சேவை) இப்ப‍டிப் பட்ட‍ பிரமுகர்களுக்கு பாராட்டு . ..  

பாராட்டியவர் யார் தெரியுமா? எந்த இலக்கிய விழாவிற்கும் ஒப்புக் கொள்ள‍ தயங்கும் திரு. சோ. அவர்கள்தான், 2 மணி நேரம் நிகழ்ச்சி களில் இருந்த திரு. சோ அவர்கள் பேசும்போது, ஒன்றை குறிப்பி ட்டார். அறிவாளிகளை திறமையாளர்களை ஒன்று சேர்ப்ப‍து என்பது சாதாரண விஷயமல்ல‍. . . அது உரத்த‍ சிந்தனையால் மட்டுமே முடியும் என்றார்.

அந்த விழாவிற்கு பிரம்மாண்டமான நிறைவுப்பரிசுகள் வழங்கி எல்லோர் நெஞ்சிலும் இன்றும் நிறைந்திருப்ப‍வர் என்.கே. டி. முத்து.

உலக அரங்கில் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்த‍ திரைப் படம் அஞ்சலி . அதன் தயாரிப்பாளர் திரு. ஜி. வெங்கடேஸ் வரன். அந்தப் படத்துக்குப் பாராட்டு விழா எடுக்க‍ உரத்த‍ சிந்தனை நினைத்து என். கே.டி.முத்துவிடம் சொன்ன‍போது, நீங்க‍ செய்யுங்கோ நான் பார்த்திக்கிறேன். என்று ஒற்றை வரி ஒப்புதல் தந்தார்.

அது ஒரு வித்தியாசமான விழா. இறைவணக்க‍ம் முதல் நன்றியுரை மேடையில் அனைவருமே பெண்கள். கவியரங்கம், பட்டிமன்றம், அஞ்சலி படத்தை பற்றிய விமர்சனம், விருது வழங்குதல் என அசத்திய விழா, திருமதி. ஜி. வெங்கடேஸ்வரனிடம் திருமதி சுலோச்சனா முத்து வழங்கிய நினைவுப்பரிசின் எடை ஐந்து கிலோ, சுஜாதா பிலிம்ஸ் என்ற ஜி.வி.யின் அலுவலகத்தில் இந்த இருதை வைக்க‍வோ தனி ஷெல்ப் அடித்தார்கள்.

இதேபோல் சிவகுமார் நடித்த‍ மறுபக்க‍ம் ராஜ்கிரண் இயக்கி நடித்த‍ அரண்மனைக்கிளி போன்ற படத்திற்கு உரத்த‍ சிந்தனை விழா நடத்தியது. அந்த விழாக்களின் வெற்றிக்கு 100 சதவித உழைப்பு, யோசனை, பொருட்செலவு அனைத்தும்விழா வேந்தருடையது.

இப்படி உரத்த‍ சிந்தனையும், விழா வேந்தரையும் யோசித்தால், ஒரு புத்த‍கமே எழுதிவிடலாம் என்று தோன்றுகிறது.

அது சரி எல்லோரும் இவரை விழா வழங்கும் கருவியாகத் தான் பயன்படுத்திக்கொண்டார்களா? இவர் தரும் பாராட்டுக்களுக்குத் தான் இவரைச் சுற்றி வருகிறார்களா? இவருக்குச் சமுதாயத்தில் என்ன‍ மதிப்பு இருகிறது? என்ற சின்ன‍ சந்தேகம் உரத்த‍ சிந்தனைக்கு ஏற்பட்ட‍து.

அதை எப்ப‍டி தெரிந்து கொள்வது?

அவருக்குத் தெரியாமல் அவருடைய 59 ஆவது பிறந்த நாளான அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்தோம். அவரைக் ஏகட்காமல் அவரைப் பற்றி பிரமுகர்கள் என்ன‍ நினைக்கிறார்கள் என்ற கருத் துக்களை தொலைபேசியிலேயே. . . கேட்டு வாங்கி தொகுத்தோம். எல்லோரும் விரும்பும் என்.கே.டி. முத்து என்ற 32 பக்க‍ தொகுப்பு நூலானது. அவரது அலுவலகத்திலேயே வெளியிட ஏற்பாடானது.

விழா பொன்னாடை, பரிசுகள் தவிர்க்க‍ப்பட்ட‍ன• அழைப்பிதழ் கிடை யாது. எல்லோரையும் தொலைபேசியிலேயே அழைத்தோம்.

நீதிபதிகள், நடிகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், எல்லாரும் அவரது அலுவலகத்திற்கு வந்து வாழ்த்திச் சென்றனர். இன்னும் அந்த நாள் நினைவில் நிற்கிறது.

நீங்கள் சமுதாயத்தை நேசித்தால், சுவாசித்தால், சமுதாயமும் உங்களை நேசிக்கும், உங்களுக்காய் சுவாசிக்கும்ய என்ற உண்மை உரத்த‍ சிந்தனைக்கு அன்றுதான் தெரிந்தது. இன்றைய உலகமும் இதைப் புரிந்து கொள்ள‍ வேண்டும்.

2002 வரை இப்ப‍டி இடைவிடாமல் இயங்கிய விழாவேந்தர், இடையில் எதிலும் பிடிப்பில்லாமல் . . . ஆர்வம் காட்டாமல் அஞ்ஞாத வாசம் இருந்தார். பேச்சு செயல்பாடுகளை குறைத்துக் கொண்டார்.

2012 துவங்கும் வேளையில் விழா வேந்தரின் இரண்டாவது இன்னிங்ஸ் பிரம்மாண்டமாய் தொடங்கியிருக்கிறது.

திருவல்லிக்கேணியில் இசை விழா 18.12.2011 முதல் 02.01.2011 வரை தினமும் 2 கச்சேரிகள். வளரும் தலைமுறையினரும், வளர்ந்த தலைமுறையினரும் இணைந்து 32 நிகழ்ச்சிகள். இந்த இசை விழாவை ஏற்பாடு செய்திருப்ப‍வர் விழாவேந்தர் என்.கே.டி. முத்துதான்.

இனி திருவல்லிக்கேணி இசைப்பிரியர்களுக்கு ஆண்டுதோறும் அருகிலேயே இசை விழா! கலைஞர்களுக்கு மீண்டும் வசந்த காலம்!

கலைத்துறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை அர்ப் ப‍ணித்துக் கொண்ட விழா வேந்தருக்கு, 08.01.2012 அன்று நம் உரத்த‍ சிந்தனை சார்பில் கலைத் தொண்டர் விருது வழங்கப் படுகிறது.

ஆமாம். . . ஒரு சின்ன‍ சந்தேகம். . . கலைஞர்களுக்கு மட்டுமே தான் கலைமாமணியா?

கலைஞர்களை சிறிப்பித்து. . . கலைக்காகவே வாழ்கிற என்.கே.டி. முத்து போன்றவர்களின் சேவையைப் பாராட்ட‍ ஏன் அரசு முன் வரக்கூடாது.?

என்.கே.டி.முத்து போன்ற மூத்த‍ கலைத்தொண்டர்களுக்கும் கலை மாமணி போன்ற விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு உரத்த‍ சிந்தனையின் அன்பான வேண்டுகோள்.

கலைஞரான அம்மா கருணையோடு பரிசீலிப்பாரா? நம்பிக்கை யுடன் காத்திருப்போம்

– திரு.உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில்)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *