கமல் ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் இந்த விஸ்வரூபம் திரைப் படம் பல்வேறு விஸ்வரூப பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முத லில் டி.டி.எச் விவகாரம், தற்போது சிறுபான்மை சமூகத்தினரை தவ றாக சித்தரிப்பதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டினால், தமிழ்நாடு தவிர்த்து, இந்தியா உட்பட உலக நாடுகளில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, கமல்ஹாசன் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி அதுபற்றி ய தீர்ப்பும் திங்கள் கிழமை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிற து.
ஆனால், நடிகர் திலகம், சுஜாதா, ஸ்ரீதேவி உட்பட பலர் நடிப்பில், 1980 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் விஸ்வரூபம் என்ற இதே தலைப்பில், யூடிப்பில் இருப்ப தை பார்ததும் அதை உங்களு க்கு பகிர நினை த்தேன்.