“ரெட்டை ஜடை வயசு” – திரைப்படம் – வீடியோ

ரெட்டை ஜடை வயசு என்கிற இந்த‌ திரைப்பட்டத்தில், அஜித் குமார் கதா நாயகனாகவும், மந்த்ரா கதா நாயகியாகவும், நடித்து, 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இதில் கவுண்டமணி, அஜய் ரத்னம், செந்தில், லதா, அபூர்வா, விஜய் கிருஷ்ண ராஜ், அனுமோகன் உட்பட பலரும் நடித்துள்ள‍னர். இந்த திரைப் படத்திற்கு தேனிசைத்தென்றல் இசை யமைத்துள்ளார். சி. சிவகுமார் இயக்கியுள் ளார்.

கதைச் சுருக்க‍ம்

சும்மா துருதுருவென சுற்றித்திரியும் நம்ம தல அஜித், காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி .. என்று தனக்கு வரப்போகும் மனைவியை பற்றியும் அவளுக்கு, தான் எப்ப‍டி எல்லாம் அலங்காரம் செய்துபார்க்க வேண்டும் என்பதை ஜாலியாக  ஒரு பாட்டுப்பாடி தனது  மாமா கவுண்ட மணிக்கு தெரிவிக் கிறார். அஜித்தின் அத்தை மகள் மந்த்ராவை அஜித்துக்கு பிடித்துப் போக அதைப் போலவே மந்தராவிற்கும் அஜித்தை பிடித்துப்போக பிறகென்ன காதல் தான்! இந்நிலையில் அஜித்தின் அக்கா மாப் பிள்ளையான பொன்வண்ணனுக்கு சிறு நீரகம் முழுவதுமாக செயலிழந்து விடுகிற து. இவருக்கு  நம்ம தல அஜித் தனது சிறு நீரகத்தை தானமாக கொடுத்து காப்பாற்று கிறார். அஜித்துக்கு தன் பெண்ணை கொடு க்க முதலில் சம்ம தித்த‍ அஜித்தின் அத்தை, அஜித் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய தால், அஜித்திற்கு ஏதே னும் பின் விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்ச‍த்தில் பின் வாங்கு கிறார். இதனால் தன் உறவுக் கார பையனான அஜய் ரத்னத்துக்கு  திரு மணம் செய்து வைக்க‍ நினைக்கி றார் . அஜித் தனது அத்தை யின் மனதை மாற்றி, அஜய் ரத்னத்தின் சூழ்ச்சியை வென்று, மந்த் ராவை கரம் பிடிக்கிறாரா என்பதை படம் பாக்காதவங்க கீழுள்ள‍ வீடியோ வினை பாருங்கள்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *