பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ

பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையு ம் இல்லாததால் விவாகரத்துகள் அதி கரித்து வருகின்றது . இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட்ரெடி பண்ண லாம் என்று ரெடி பண்ணியதுதான் ராஜா ராணி. ரொம்ப பாசிடிவ்வான படம். படத் தில் நல்ல புரிதல் தெரியும். முன்பின் தெரியாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும் போது அவர்களுக்குள் இருக்கும் ஈகோ, திருமணத்திற்கு பிறகு அந்தே ஈகோவால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சிறிது நகைச்சுவையு டன் கூறப்பட்டுள்ள‍து.

மேலும் இந்தி திரை உலகில் பெருமளவில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் திரை ப்படங்கள் தயாராவதும் வெற்றி பெறுவதும் அங்கு வாடிக்கை. ஆனால், சமீபமாக தமிழ் திரை உலகிலும் பல நட்சத்திரங்கள் ஒன்றுகூடி நடித்து வெளிவரும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதுடன் வசூலையும் வாரிக்குவிக்கிறது. இதற்கு உதாரணமாக நண்பன் திரைப்படத்தை எடுத்துக்கொள்ள‍லாம். அதில், விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த என்று காதாநாயகர்க ளும், விஜய்க்கு ஜோடியாக இலியா னா நடித்திருப்பார். அவருக்கு ஜோடி யாக நடிகை அனுயாவும் இவர்கள் இருவரின் தகப்ப‍னாகவும், விஜய் படிக் கும் கல்லூரியில் முதல்வராகவும் சத்தியராஜ் வருவார். இந்த் திரைப் படத்தை ஷங்கர் இயங்கினார். அது பெறு வெற்றி பெற்றது. என்ன‍தாக் இந்தியில் வெளி வந்த 3 இடியன்ஸ் என்ற படதின் ரீமாக்காக இருந்தாலும், தமிழில் வெளியாகி வசூல் மழை பொழிந்தது . அதே முறையில்தான் இந்த ராஜா ராணி ஒரு புதிய சாதனை படைக்கி றது என கூறலாம். ஒரு அறிமுக இயக்கு னர் அட்ட்லீ] முதல் படத்திலேயே ஆர்பாட் டமான ஆர்யா முதல் நவரசம் வழங்கும் ஜெய் வரை, அழகு ராணி நயன் தாரா முதல் அழகு இளவரசி நசரியா  வரை, காமெடி கிங் சந்தானம் முதல் நகைச் சுவை மிளிரும் சத்யன் வரை மற் றும் என்றும் இளமையுடன் இருக்கும் சத்யராஜ் என பல்வேறு நட்சத் திரங்களை வைத்து இயக்குவது சாதனைதானே! ராஜா ராணி கீழுள்ள‍ வீடியோவில் டிரைலரில் பாருங்கள். முழு ராஜாராணியை பார் க்க‍ வேண்டுமானால், திரையரங்கம் சென்று பார்த் து மகிழுங்கள்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *