மொழி (தமிழ்த்திரைப்படம்) – நல்லதொரு திரைக்காவியம் – வீடியோ
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இராதாமோகன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அருமையான குடும்ப காவியம் மொழி திரைப்படம் இத்திரைப்படத்தில் ப்ரத்விராஜ், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, எம்.எஸ். பாஸ்கர், நீலிமா ராணி, வச்சலா ராஜகோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர் இல் லை இல்லை அந்தந்த
கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர் என்றே சொல்லலாம்.
இத்திரைப்படத்தில் நடிகை ஜோதிகா காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்து தனது திறமையை திரை யுலகுக்கு மட்டுமல்லா து உலக மக்களுக்கே மெ ய்ப்பித் துள்ளார்.
கதையின் கரு இதுதான் !
வாய்பேசமுடியாத, காது கேளாத பெண்ணாகவரும்ஜோதிகா வை கதாநாயகன் பிர த்விராஜ் காதலித்து கரம் பிடிக்கிறார். இடையில் அப்பெண்ணை இத்திருமணத்திற்கு விருப்பம் இல் லை. அவர் எப்படி மனம் மாறி ப்ரத் விராஜின் கரம் பிடிக்கிறார் என்பதே கதையின் ஒரு பகுதி
திருமணமான சொற்ப நாட்களிலே யே தனது கணவனை இழந்து வாழு ம் பெண்ணாக வரும் சொர்ண மால்யாவை முதலில் தோழி யாக பார்த்த பிரகாஷ்ராஜ் பின் அவ ரையே திருமணமும் செய்து கொள்கிறார். இது கதையின் இன் னொரு பகுதி
சமுதாயத்திற்கு தேவையா ன இரண்டு கருத்துக்களை இத்திரை ப்படம் ஆணித் தரமாக எடுத்துக்காட்டியுள் ளது.
1. மாற்றுத் திறனாளிகளும் மனிதர்கள்தான் அவர்கள து மனதிலும் காதல் மலரு ம் அவர்களும் பிறரைப் போலவே இல்லற வாழ்வில் ஈடுபட விரும்புவார்கள் என்பது எடுத்துக்காட்டியது.
2. இளம் விதவைகளின் மறுமணத்தை வலியுறுத்தியுள்ளது.
இதோ அந்த அற்புத திரைக்காவியம்