நான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன் – நடிகை சாயிஷா

நான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன் – நடிகை சாயிஷா

நான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன் – நடிகை சாயிஷா

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும்

மக்க‍ள் செல்வனாகவும் தனக்கென்று ஒரு பாணியை வைத்து வெற்றி கரமாக‌ வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடித்து, கோகுல் இயக்கும் ஜுங்கா திரைப்படம் ஆகும். இந்த திரைப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

அண்மையில் அஸெர்பெய்ஜான் நாட்டில் ஜுங்கா திரைப் படத்திற்காக ஒரு காட்சி படப்பிடிப்பை முடித்திருக்கும் நடிகை சாயிஷா, விஜய்சேதுபதி பற்றி கூறும் போது `அவர் நிஜத்திலும் ஒரு ஹீரோ தான்.

காரில் நானும் அவரும் செல்லும் போது கார் துரத்தப்பட்டு பயங்கரமாக நொறுங்கும் ஒரு காட்சியை எடுத்தோம். அப்போது டூப் வைத்துக் கொள்ள மறுத்து விட்டார். முற்றிலும் ஒரு புது நாட்டில் பயங்கரமான கார் துரத்தலில் காரை ஓட்டி செல்வது என்ற ஆபத்தான செயலை மிக துணிச்சலாக செய்து காட்டினார்.

அவர் கார் ஓட்டியதை பார்த்து அருகில் அமர்ந்து இருந்த நான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன். என்றார். #Junga #VijaySethupathi #Sayyeshaa #Sayyeshaa saigal

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *