கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸின் மூன்றாவது சீசன் தற்போது சில போட்டியாளர்களை மட்டுமே வீட்டில் வைத்திருக்கும் ஒரு கட்டத்தை எட்டியுள்ளது, மேலும் ஒன்பதாவது வாரத்தில், நிகழ்ச்சியில் இந்த வாரம் எந்தவி சுவாரஸ்யமான தருணங்கள் ஏதும் இல்லை. கடந்த வாரம் அபிராமி வெங்கடச்சலம் குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு முன்னதாக எதிர்பாராத விதமாக மதுமிதா வெளியேறியது பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் உள்ளானது.
இந்த வாரம், வெளியேற்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்கள் கஸ்தூரி, சேரன், சாண்டி மற்றும் தர்ஷன், அவர்களில் தர்ஷன் மற்றும் சாண்டி முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்றுள்ளனர். சேரன் மூன்றாவது இடத்தில் இருந்து ஒரு பெரிய தூரத்திலும் இருக்கிறார். தற்போதைய வாக்குகள் சதவீதம்படி மிகவும் குறைவான வாக்குகள் பெற்று கஸ்தூரி பின்தங்கியுள்ளார். இவர் வைல்டு கார்டு போட்டியாளராக இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டிற்குள் நுழைந்திருந்தார், அவர் வெளியில் இருந்தபோது தன்னை ஒரு பிக்பாஸ் ஆர்வலராக காட்டிக் கொண்டிருந்தாலும், குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பதால், கஸ்தூரி இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அநேகமாக பிக்பாஸ் வீட்டில் இரு்நது கஸ்தூரி வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வரும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் அறிவிப்பார் என்றும் எதிர்ப்பார்ககப்படுகிறது.