பிக்பாஸ் கமலை கண்டித்த மதுமிதா

பிக்பாஸ் கமலை கண்டித்த மதுமிதா

This image has an empty alt attribute; its file name is madhumitha.jpg

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 77 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.

அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.

இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி போலீசில் புகாரளித்தது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதுமிதா தன் மீது விஜய் டிவி பொய்ப் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி விஜய் டிவி நிர்வாகம் மீது மதுமிதா நசரத் பேட்டை காவல்நிலையத்தில் தபால் மூலமாக புகார் அளித்துள்ளார். அதில், ஹலோ ஆப் டாஸ்க்கின் போது சக போட்டியாளர்கள் தன்னைக் கொடுமைப்படுத்தியதையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகை மதுமிதா செய்தியாளர்களை சந்தித்து விஜய் டிவி நிர்வாகம் குறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நடைபெற்ற அநீதிகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் சுதந்திர தினத்தன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். மேலும், உடன் இருந்த மற்ற போட்டியாளர்கள் குழுவாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் நடிகை மதுமிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மதுமிதா, நான் தற்கொலை முயற்சி எடுத்தபோது என்னை கஸ்தூரியும், சேரனும் தான் காப்பாற்ற முயன்றார்கள் என்றும், மற்றவர்கள் ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் இருந்தது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல்ஹாசன் குரல் கொடுக்க வேண்டும் என்றும், 40 நிமிட எபிசோடை மட்டும் பார்த்து கமல் பேசாமல் வீட்டில் 24-மணி நேரம் என்ன நடக்கிறது என்பதை கமல் கண்காணிக்க வேண்டும் என்றும் நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#பிக்பாஸ், #விஜய்_டிவி, #விஜய்_தொலைக்காட்சி, #மதுமிதா, #ஷெரின், #கஸ்தூரி, #சேரன், #வனிதா, #லாஸ்லியா, #சரவணன், #கவின், #சாண்டி, #முகின், #தர்ஷன், #ஃபாத்திமா_பாபு, #சாக்ஷி, #அபிராமி, #மோகன்_வைத்யா, #விதை2விருட்சம், #Bigg_Boss, #Vijay_TV, #Vijay_Television, #Madhumitha, #Sherin, #Kasthuri, #Cheran, #Vanitha, #Lossliya, #Saravanan, #Kavin, #Sandy, #Mugen, #Dharshan, #Fathima_Babu, #Sakshi, #Abirami, #Mogan_Vaidya, #vidhai2virutdcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *